சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி போட்டோ எடுத்து மிரட்டிய இன்ஜினியர் : 'போக்சோ' வழக்குப்பதிவு செய்து விசாரணை

Added : செப் 29, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை;பள்ளி மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்ததோடு, புகைப்படம் எடுத்து மிரட்டி, 60 பவுன் நகையும் பறித்த இன்ஜி., மீது, 'போக்சோ' வழக்கு பதிவு செய்து விசாரிக்கப்படுகிறது.பீளமேட்டை சேர்ந்த, 13 வயது மாணவி அப்பகுதியிலுள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ராஜபாளையத்தை சேர்ந்த ஐ.டி., இன்ஜினியர் ஸ்ரீதர், 23 பழக்கமானார்.இருவரும் காதலிக்க

கோவை;பள்ளி மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்ததோடு, புகைப்படம் எடுத்து மிரட்டி, 60 பவுன் நகையும் பறித்த இன்ஜி., மீது, 'போக்சோ' வழக்கு பதிவு செய்து விசாரிக்கப்படுகிறது.

பீளமேட்டை சேர்ந்த, 13 வயது மாணவி அப்பகுதியிலுள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ராஜபாளையத்தை சேர்ந்த ஐ.டி., இன்ஜினியர் ஸ்ரீதர், 23 பழக்கமானார்.இருவரும் காதலிக்க துவங்கினர். மாணவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தல் அளித்த வாலிபர், அதனை மாணவிக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்துள்ளார்.

வாலிபர் சென்னையில் வேலைக்கு சேர்ந்தநிலையில், மாணவியை போனில் தொடர்பு கொண்டு, இருவரும் தனிமையில் இருந்த போட்டோ, வீடியோ பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க, பணம், நகை கேட்டு மிரட்டியுள்ளார். மாணவி பயத்தில் வீட்டில் இருந்த, 60 பவுன் நகைகளை வாலிபரிடம் கொடுத்துள்ளார்.இதற்கிடையே வீட்டில் இருந்த நகைகள் மாயமானது குறித்து, பெற்றோர் விசாரித்தபோது மாணவி இந்த தகவல்களை தெரிவித்துள்ளார்.மாணவியின் பெற்றோர் கோவை மாநகர அனைத்து மகளிர் கிழக்கு பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.புகாரின்பேரில் வாலிபர் மீது, போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
29-செப்-202112:08:47 IST Report Abuse
JeevaKiran 13 வயது மாணவி.. அப்படி என்ன காதல் வேண்டி கிடக்குது? இப்ப கஷ்டங்களை அனுபவிப்பது யார்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X