கடற்படை விமானங்களில் உள்ளூர் தொழில்நுட்பம்; தொழில் அமைப்புகளுடன் ஆலோசனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடற்படை விமானங்களில் உள்ளூர் தொழில்நுட்பம்; தொழில் அமைப்புகளுடன் ஆலோசனை

Added : செப் 29, 2021
Share
கோவை;கடற்படை விமான போக்குவரத்து துறையில், உள்ளூர் தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்திய கடற்படை மற்றும் கடற்படை விமான போக்குவரத்து சார்பில், பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு மற்றும், 'டிபன்ஸ் பப்ளிக் செக்டார் அண்டர்டேக்கிங்' அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம், உள்நாட்டிலேயே விமான பழுதுபார்ப்பு மேற்கொள்ள,
 கடற்படை விமானங்களில் உள்ளூர் தொழில்நுட்பம்; தொழில் அமைப்புகளுடன் ஆலோசனை

கோவை;கடற்படை விமான போக்குவரத்து துறையில், உள்ளூர் தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்திய கடற்படை மற்றும் கடற்படை விமான போக்குவரத்து சார்பில், பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு மற்றும், 'டிபன்ஸ் பப்ளிக் செக்டார் அண்டர்டேக்கிங்' அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம், உள்நாட்டிலேயே விமான பழுதுபார்ப்பு மேற்கொள்ள, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதை உறுதி செய்வதற்காக, கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம்(கொடீசியா) மற்றும் உள்ளூர் தொழில்களுடனான கலந்தாய்வு கூட்டம், ஐ.என்.எஸ்., அக்ரானியில் நடந்தது.கொச்சி கடற்படை விமானப்படை கண்காணிப்பாளர் கமோடர் யோகேஷ் பாண்டே தலைமை வகித்தார்.சூலுார் விமானம், இஞ்சின் ஹோல்டிங் யூனிட் அலுவலர்(பொறுப்பு) கமோடர் டேவிட், 100க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனத்தினர், வர்த்தகர்கள் பங்கேற்றனர். விமான மற்றும் கடல்சார் பொறியியல் துறையில் சாத்தியமான விற்பனையாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.250க்கும் மேற்பட்ட உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றின் பழுது பார்க்கும் திறன் உள்ளிட்ட பல்வேறு திறன்கள் விளக்கப்பட்டன.விமானம், கப்பல்களை பழுது நீக்குவதற்கான உள்ளூர் தொழில்நுட்பங்களை ஊக்குவிப்பதை, முக்கிய நோக்கமாக கொண்டு கூட்டம் நடத்தப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X