தடுப்பூசி கணக்கு இடிக்குதே... யாரு சொல்றது சரியா இருக்கும்?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி 'கணக்கு' இடிக்குதே... யாரு சொல்றது சரியா இருக்கும்?

Added : செப் 29, 2021
Share
கோவை:கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடத்திய சிறப்பு முகாமில், ஒரு லட்சத்து, 13 ஆயிரத்து, 618 பேருக்கு தடுப்பூசி செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், 'கோவின்' இணையதளத்தில், 98 ஆயிரத்து, 331 பேருக்கே தடுப்பூசி செலுத்தியிருப்பதாக பதிவிடப்பட்டிருக்கிறது.கோவை மாவட்டத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கொரோனா தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. கடந்த

கோவை:கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடத்திய சிறப்பு முகாமில், ஒரு லட்சத்து, 13 ஆயிரத்து, 618 பேருக்கு தடுப்பூசி செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், 'கோவின்' இணையதளத்தில், 98 ஆயிரத்து, 331 பேருக்கே தடுப்பூசி செலுத்தியிருப்பதாக பதிவிடப்பட்டிருக்கிறது.கோவை மாவட்டத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கொரோனா தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, முதல் டோஸ் - 46 ஆயிரத்து, 932 பேருக்கும், இரண்டாவது டோஸ் - 66 ஆயிரத்து, 686 பேருக்கும் தடுப்பூசி செலுத்தியிருப்பதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.அதாவது, அன்று நடந்த ஒரு நாள் முகாமில், ஒரு லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது; அதை தாண்டி, ஒரு லட்சத்து, 13 ஆயிரத்து, 618 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டது.ஆனால், மத்திய அரசு பராமரிக்கும் 'கோவின்' இணையதளத்தில், கோவை மாவட்டத்தில், இதுவரை, 33 லட்சத்து, 24 ஆயிரத்து, 641 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இதில், 25 லட்சத்து, 2 ஆயிரத்து, 53 பேருக்கு முதல் டோஸ், 8 லட்சத்து, 22 ஆயிரத்துக்கு, 588 பேருக்கு இரண்டாவது டோஸ் செலுத்தியிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.கடந்த ஞாயிறன்று, முதல் டோஸ் - 40 ஆயிரத்து, 823 பேருக்கும், இரண்டாவது டோஸ் - 57 ஆயிரத்து, 508 பேருக்கும், மொத்தம், 98 ஆயிரத்து, 331 பேருக்கும் தடுப்பூசி செலுத்தியிருப்பதாக, அதிலுள்ள புள்ளி விபரம் சொல்கிறது.ஆனால், ஒரு லட்சத்து, 13 ஆயிரத்து, 618 பேருக்கு தடுப்பூசி செலுத்தியதாக, கோவை மாவட்ட அளவில் கணக்கு காட்டப்பட்டு, 15 ஆயிரத்து, 287 பேருக்கு கூடுதலாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.தடுப்பூசி செலுத்துவதில், மாவட்ட பொது சுகாதாரத்துறை சொல்லும் கணக்கும், 'கோவின்' இணையதளத்தில் இருக்கும் கணக்கும் முரண்பட்டு காணப்படுவதன் மர்மம் என்னவோ?

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X