டென்னிஸ் போட்டி: சூர்யபாபு அசத்தல்

Added : செப் 29, 2021
Share
Advertisement
கோவை:மாநில அளவிலான டென்னிஸ் போட்டியில், 14 வயது பிரிவில் சூர்யபாபு; 16 வயது பிரிவில் ஆதித் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.கோவை, லிவோ ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஸ்போர்ட் இந்தியா இணைந்து நடத்தும், 'நான் ரேங்கிங்'மாநில அளவிலான டென்னிஸ் போட்டி காளப்பட்டி ரோடு, லிவோ ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. 10, 12, 14, 16 வயது, ஒற்றையர் பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர்,

கோவை:மாநில அளவிலான டென்னிஸ் போட்டியில், 14 வயது பிரிவில் சூர்யபாபு; 16 வயது பிரிவில் ஆதித் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.கோவை, லிவோ ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஸ்போர்ட் இந்தியா இணைந்து நடத்தும், 'நான் ரேங்கிங்'மாநில அளவிலான டென்னிஸ் போட்டி காளப்பட்டி ரோடு, லிவோ ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. 10, 12, 14, 16 வயது, ஒற்றையர் பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், சென்னை, ஊட்டி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.14 வயதுக்குட்பட்டோருக்கான இறுதிப்போட்டியில், சூர்யபாபு ராஜ்குமார், 6-3 என்ற புள்ளி கணக்கில், அகில்பாபுஜியையும்; 16 வயதுக்குட்பட்டோருக்கான இறுதிப்போட்டியில், ஆதித், 6-2 என்ற புள்ளி கணக்கில், நிகிலேஷ்வரராமையும் வென்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ், கோப்பைகள், பரிசுப்பொருட்கள் வழக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X