டேக்வாண்டோ போட்டி: கோவைக்கு பெருமை

Added : செப் 29, 2021
Share
Advertisement
கோவை:ஆன்லைன் வாயிலாக நடந்த டேக்வாண்டோ போட்டியில் கோவை வீரர், வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பதக்கங்களை குவித்தனர்.மலேசியா டேக்வாண்டோ அசோசியேஷன் சார்பில், 'சி.கே., மலேசியன் ஓபன் டேக்வாண்டோ' போட்டிகள், ஆன்லைன் வாயிலாக நடந்தன. சப்-ஜூனியர், கேடட், ஜூனியர், சீனியர் வீரர், வீராங்கனைகளுக்கான 'ஸ்பீடு கிக்கிங்', பும்சே பிரிவுகளில்போட்டிகள்

கோவை:ஆன்லைன் வாயிலாக நடந்த டேக்வாண்டோ போட்டியில் கோவை வீரர், வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பதக்கங்களை குவித்தனர்.மலேசியா டேக்வாண்டோ அசோசியேஷன் சார்பில், 'சி.கே., மலேசியன் ஓபன் டேக்வாண்டோ' போட்டிகள், ஆன்லைன் வாயிலாக நடந்தன. சப்-ஜூனியர், கேடட், ஜூனியர், சீனியர் வீரர், வீராங்கனைகளுக்கான 'ஸ்பீடு கிக்கிங்', பும்சே பிரிவுகளில்போட்டிகள் நடத்தப்பட்டன.இப்போட்டியில், கோயம்புத்துார் மாவட்ட டேக்வாண்டோ அசோசியேஷன் சார்பில், 16 வீரர்கள் பங்கேற்றனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 9 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கல பதக்கங்களை வென்று அசத்தினர்.வெற்றி பெற்ற மாணவர்களை, டேக்வாண்டோ அசோசியேஷன் தலைவர் லட்சுமிநாராயணன், பயிற்சியாளர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் பாராட்டினர். இத்தகவலை, கோயம்புத்துார் மாவட்ட ஸ்போர்ட்ஸ் டேக்வாண்டோ அசோசியேஷன் செயலாளர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X