பொது செய்தி

தமிழ்நாடு

திட்டச்சாலை உருவாக்க ரூ.9 கோடி கொடுங்க: உள்ளூர் திட்ட குழும நிதி ஒதுக்க எதிர்பார்ப்பு

Added : செப் 29, 2021
Share
Advertisement
கோவை;கோவையில், 40 அடி திட்டச்சாலை உருவாக்க, தனியார் நிலம் கையகப்படுத்தவும், சாலை உருவாக்கவும், உள்ளூர் திட்ட குழும நிதியில், 9 கோடியே, 6 லட்சத்து, 39 ஆயிரத்து, 937 ரூபாய் ஒதுக்க, மாநகராட்சி கோரியுள்ளது.கோவை மாநகராட்சி, 38வது வார்டு, பீளமேட்டில் வருங்கால வைப்பு நிதி அலுவலர்களுக்கு குடியிருப்பு கட்டுவதற்கு, 3.53 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. 40 அடி திட்டச்சாலை உருவாக்காமலும்,

கோவை;கோவையில், 40 அடி திட்டச்சாலை உருவாக்க, தனியார் நிலம் கையகப்படுத்தவும், சாலை உருவாக்கவும், உள்ளூர் திட்ட குழும நிதியில், 9 கோடியே, 6 லட்சத்து, 39 ஆயிரத்து, 937 ரூபாய் ஒதுக்க, மாநகராட்சி கோரியுள்ளது.கோவை மாநகராட்சி, 38வது வார்டு, பீளமேட்டில் வருங்கால வைப்பு நிதி அலுவலர்களுக்கு குடியிருப்பு கட்டுவதற்கு, 3.53 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. 40 அடி திட்டச்சாலை உருவாக்காமலும், வரைபட அனுமதி பெறாமலும் குடியிருப்பு கட்டப்பட்டது.

திட்டச்சாலை அமைப்பது தொடர்பாக, 'பீளமேடு கன்ஸ்யூமர் வாய்ஸ்' அமைப்பினர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, உத்தரவு பெற்றனர். இருப்பினும், திட்டச்சாலை அமைக்காத காரணத்தால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருக்கின்றனர்.இச்சூழலில், பாலகுரு கார்டனில் தனியார் நிலத்தை கையகப்படுத்த, மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க, 2 கோடியே, 29 லட்சத்து, 60 ஆயிரத்து, 116-ஐ உள்ளூர் திட்ட குழும நிதி ஒதுக்கக்கோரி, மாநகராட்சி கடிதம் அனுப்பியது.சென்னையில் இருந்து நகர ஊரமைப்புத்துறை இயக்குனர் எழுதியுள்ள கடிதத்தில், திட்டச்சாலைக்கான மறுசீரமைப்பு வரைபடத்தின்படி, திட்டச்சாலை அமைக்க, தனியார் நிலங்களை கையகப்படுத்த உத்தேச இழப்பீடு தொகை மற்றும் சாலை அமைப்பதற்கான மதிப்பீடு கணக்கிட்டு, உள்ளூர் திட்ட குழும தீர்மானத்துடன் அனுப்பி வைக்க தெரிவிக்கப்பட்டிருந்தது.

நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க, 8 கோடியே, 72 லட்சத்து, 39 ஆயிரத்து, 937 ரூபாய், சாலை அமைக்க, 34 லட்சம் ரூபாய் சேர்த்து, 9 கோடியே, 6 லட்சத்து, 39 ஆயிரத்து, 937 ரூபாயை, உள்ளூர் திட்ட குழும நிதியில் இருந்து ஒதுக்கக்கோரி, நகர ஊரமைப்புத்துறைக்கு மாநகராட்சியில் இருந்து கடிதம் எழுதப்பட்டுள்ளது.பி.எப்., அலுவலர் குடியிருப்பு வழியாக, 40 அடி திட்டச்சாலை அமைந்தால், பாலகுரு கார்டன் வழியாக, எல்லைத்தோட்டம் சாலையை அடையலாம்; வாகன போக்குவரத்து எளிதாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X