பொது செய்தி

தமிழ்நாடு

காய்கறி விவசாயிகளுக்கு பொருளீட்டு கடன் வசதி

Added : செப் 29, 2021
Share
Advertisement
காஞ்சி : விளை பொருட்கள் விற்பனை மற்றும் பொருளீட்டு கடன் வசதி பெறுவது குறித்து, காஞ்சிபுரம் விற்பனை குழு செயலர் ராம்குமார் கூறியதாவது:காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் பல இடங்களில் ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் உள்ளன.இங்கு நெல், மணிலா, உளுந்து, எள், வெல்லம், மிளகாய், புளி, கழிவு பஞ்சு, தேங்காய், கொள்ளு, வரகு ஆகிய வேளாண் விளை பொருட்களை மறைமுகமாக
 காய்கறி விவசாயிகளுக்கு பொருளீட்டு கடன் வசதி

காஞ்சி : விளை பொருட்கள் விற்பனை மற்றும் பொருளீட்டு கடன் வசதி பெறுவது குறித்து, காஞ்சிபுரம் விற்பனை குழு செயலர் ராம்குமார் கூறியதாவது:காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் பல இடங்களில் ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் உள்ளன.

இங்கு நெல், மணிலா, உளுந்து, எள், வெல்லம், மிளகாய், புளி, கழிவு பஞ்சு, தேங்காய், கொள்ளு, வரகு ஆகிய வேளாண் விளை பொருட்களை மறைமுகமாக ஏலம் நடத்தி, தேசிய வேளாண் சந்தை மூலமாக, மின்னணு முறையில் விற்பனை செய்யலாம். இதில் கிடைக்கும் வருவாய், விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.அதேபோல் காய்கறிகளை, உழவர் சந்தைகளில் விற்பனை செய்து விவசாயிகள் பயன்பெறலாம். காய்கறி விலை குறையும்போது, அவற்றை இருப்பு வைக்க, கிடங்கு வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது.

இதை, 75 சதவீத பொருளீட்டு கடன் வசதியுடன், 180 நாட்கள் இருப்பு வைத்து பயன்படுத்தி கொள்ளலாம்.இருப்பு வைக்கப்படும் 15 நாட்களுக்கு வட்டியின்றியும், 15 நாட்களுக்கு மேல், 5 சதவீத வட்டி தொகையும் வசூலிக்கப்படும்.வேளாண் விளை பொருட்களின் தினசரி விபரங்களை 'உழவன்' செயலி மூலமாக அறியும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.விவசாயிகள், ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக, விளை பொருட்களை விற்பனை செய்து பயன்பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 94421 73117

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X