அட்வைஸ் செய்த அரசு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'அட்வைஸ்' செய்த அரசு

Added : செப் 29, 2021
Share
கோவை:கோவை உப்பிலிபாளையம் விவேகானந்தா நகரை சேர்ந்தவர் கணேஷ்,47. இவர், செஞ்சேரிமலை மலையடிபாளையம் டாக்டராக பணியாற்றி வருகிறார். நேற்றுமுன்தினம்பணி முடிந்து வீடு திரும்பியுள்ளார்.அலமேலு நகர் அருகே இளைஞர் ஒருவர், தனது இரண்டு வயது குழந்தையை பைக்கில் அமர வைத்து, ஒரு கையில் வண்டியை ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது.இதை பார்த்த கணேஷ், 'இப்படி அஜாக்கிரதையாக வண்டி ஓட்டினால்

கோவை:கோவை உப்பிலிபாளையம் விவேகானந்தா நகரை சேர்ந்தவர் கணேஷ்,47. இவர், செஞ்சேரிமலை மலையடிபாளையம் டாக்டராக பணியாற்றி வருகிறார். நேற்றுமுன்தினம்பணி முடிந்து வீடு திரும்பியுள்ளார்.அலமேலு நகர் அருகே இளைஞர் ஒருவர், தனது இரண்டு வயது குழந்தையை பைக்கில் அமர வைத்து, ஒரு கையில் வண்டியை ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது.இதை பார்த்த கணேஷ், 'இப்படி அஜாக்கிரதையாக வண்டி ஓட்டினால் விபத்து ஏற்பட்டு விடும்' எனக் கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த இளைஞர், 'இது என் குழந்தை; உனக்கு என்ன பிரச்னை' எனக்கூறி டாக்டரை தாக்கியுள்ளார்.தவிர, இளைஞரின் மனைவியும், உறவினர்களும் டாக்டரை தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த டாக்டர் கணேஷ், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுதொடர்பாக, சிங்காநல்லுார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், டாக்டரை தாக்கியது பாஸ்கரன் எனும் இளைஞர் என தெரியவந்தது. அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X