இதய நோயை தடுப்பது எப்படி?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இதய நோயை தடுப்பது எப்படி?

Added : செப் 29, 2021
Share
இதய ஆரோக்கியம் குறித்து, ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது:மாரடைப்பு காரணமாக, ஒவ்வொரு, 33 விநாடியும் ஒருவர் இறக்கிறார். உடற்பயிற்சியின்மை, அதிக கொழுப்பு மற்றும் எடை, புகைப்பிடித்தல், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவை காரணங்கள்.வாழ்வில் சில சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம், இதய நோய் அபாயத்தைக் குறைக்கலாம். உணவில் பழங்கள்,

இதய ஆரோக்கியம் குறித்து, ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது:மாரடைப்பு காரணமாக, ஒவ்வொரு, 33 விநாடியும் ஒருவர் இறக்கிறார். உடற்பயிற்சியின்மை, அதிக கொழுப்பு மற்றும் எடை, புகைப்பிடித்தல், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவை காரணங்கள்.வாழ்வில் சில சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம், இதய நோய் அபாயத்தைக் குறைக்கலாம். உணவில் பழங்கள், காய்கறி, தானியங்கள், மீன் என ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும். புகைப்பிடிக்க கூடாது, புகைப்பிடிப்பவருக்கு அருகிலும் இருக்க கூடாது.தினமும் குறைந்தது, 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். மன அழுத்தத்தை தவிர்த்து, தியானம் செய்ய வேண்டும். ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, கெட்ட கொழுப்பு, எடை மற்றும் பி.எம்.ஐ., வயிற்று சுற்றளவு இயல்பை விட அதிகமாக இருந்தால், உடனே மருத்துவரை அணுகவும். மேலும் விபரங்களுக்கு, 0422 - 222 7100.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X