ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் மணல் சிற்ப கலைஞர் அசத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் மணல் சிற்ப கலைஞர் அசத்தல்

Added : செப் 29, 2021
Share
சென்னை : சென்னை, ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில், சென்ட்ரல் ரயில் நிலையம், பரதநாட்டிய கலைஞர் உள்ளிட்ட வடிவங்களை, மணல் சிற்பமாக வடித்து அசத்தியுள்ளார், மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்.'புத்துணர்ச்சியுடன் மீண்டெழும் தமிழகம்' என்ற தலைப்பில், 'டாடா டீ சக்ரா கோல்டு' உடன் இணைந்து, ஈஞ்சம்பாக்கம், வி.ஜி.பி., கடற்கரை நிர்வாகம், மணல் சிற்ப கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தது. உலகின்
 ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் மணல் சிற்ப கலைஞர் அசத்தல்

சென்னை : சென்னை, ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில், சென்ட்ரல் ரயில் நிலையம், பரதநாட்டிய கலைஞர் உள்ளிட்ட வடிவங்களை, மணல் சிற்பமாக வடித்து அசத்தியுள்ளார்,

மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்.'புத்துணர்ச்சியுடன் மீண்டெழும் தமிழகம்' என்ற தலைப்பில், 'டாடா டீ சக்ரா கோல்டு' உடன் இணைந்து, ஈஞ்சம்பாக்கம், வி.ஜி.பி., கடற்கரை நிர்வாகம், மணல் சிற்ப கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தது. உலகின் புகழ் பெற்ற மணல் சிற்ப கலைஞரான, ஒடிசாவை சேர்ந்த சுதர்சன் பட்நாயக், வி.ஜி.பி., கடற்கரையில், மணல் சிற்பம் உருவாக்கினார். இதில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், பரதநாட்டியம் ஆடும் பெண், நாதஸ்வரம், தவில் வாசிக்கும் கலைஞர்கள், காஞ்சிபுரம் பட்டுப்புடவை, தெருக்கோலம், பாரம்பரிய கதைகளின் வர்ணனை உள்ளிட்ட உருவங்களை தத்ரூபமாக உருவாக்கினார்.

இது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.இதுகுறித்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியதாவது:தமிழக மக்கள், தினமும் காலையில் புத்துணர்ச்சிக்காக, 'டாடா டீ சக்ரா கோல்டு' தேனீர் அருந்துவது வழக்கம். அதே போல், புத்துணர்ச்சிக்காக சென்னைவாசிகள் கடற்கரைக்கு செல்வதும் வழக்கம். அந்த வகையில், தமிழக மக்கள், கொரோனா பாதிப்பிலிருந்து புத்துணர்ச்சியுடன் மீண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில், இந்த மணல் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், சிறப்பாக கலையை வெளிப்படுத்தி உள்ளார்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X