பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் ஏற்பாடு: பார்வையாளர் ஆய்வு

Added : செப் 29, 2021
Share
Advertisement
உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியத்தில், இரு மாவட்ட கவுன்சிலர், 22 ஒன்றிய கவுன்சிலர், 73 ஊராட்சி தலைவர், 474 வார்டு உறுப்பினர் என, 571 பதவி இடங்களுக்கான தேர்தல், 252 ஓட்டுச்சாவடிகளில் வரும், அக்., 6ல் நடைபெற உள்ளது.ஓட்டுச்சாவடிக்கு தேவையான, அழியா மை, பேனா, பென்சில், அரக்கு சீல், மெழுகுவர்த்தி உள்ளிட்ட, 72 வகையான பொருட்கள், 252 ஓட்டுச்சாவடிக்கும் அனுப்ப, ஓட்டுச்சாவடி வாரியாக பிரிக்கும்
 தேர்தல் ஏற்பாடு: பார்வையாளர் ஆய்வு

உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியத்தில், இரு மாவட்ட கவுன்சிலர், 22 ஒன்றிய கவுன்சிலர், 73 ஊராட்சி தலைவர், 474 வார்டு உறுப்பினர் என, 571 பதவி இடங்களுக்கான தேர்தல், 252 ஓட்டுச்சாவடிகளில் வரும், அக்., 6ல் நடைபெற உள்ளது.

ஓட்டுச்சாவடிக்கு தேவையான, அழியா மை, பேனா, பென்சில், அரக்கு சீல், மெழுகுவர்த்தி உள்ளிட்ட, 72 வகையான பொருட்கள், 252 ஓட்டுச்சாவடிக்கும் அனுப்ப, ஓட்டுச்சாவடி வாரியாக பிரிக்கும் பணி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்து வருகிறது.இப்பணியை, காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் பார்வையாளர் அமுதவல்லி, நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.தொடர்ந்து, உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு, ஓட்டு எண்ணும் மையமான திருப்புலிவனம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் செய்யப்பட்டுள்ள முன் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X