துாக்கம் இருந்தால் துக்கம் கிடையாது!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

துாக்கம் இருந்தால் துக்கம் கிடையாது!

Added : செப் 29, 2021
Share
உணவு கட்டுப்பாடு அவசியம்!பிரேம் கிருஷ்ணா, இருதயவியல் நிபுணர், பி.எஸ்.ஜி.,மருத்துவமனை.குறைந்த கொழுப்புச் சத்து உள்ள நவதானியங்கள், காய்கறி, பழங்கள், கீரைகள் உட்கொள்ள வேண்டும். வயதிற்கேற்ற உடல் எடையை பராமரிக்க வேண்டும். வாரத்திற்கு 120 நிமிடங்களாவது உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். தினமும் 6 முதல் 7 மணி நேரம் உறக்கம் வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்கள், வருடத்திற்கு ஒரு முறை
 துாக்கம் இருந்தால் துக்கம் கிடையாது!

உணவு கட்டுப்பாடு அவசியம்!பிரேம் கிருஷ்ணா, இருதயவியல் நிபுணர், பி.எஸ்.ஜி.,மருத்துவமனை.குறைந்த கொழுப்புச் சத்து உள்ள நவதானியங்கள், காய்கறி, பழங்கள், கீரைகள் உட்கொள்ள வேண்டும். வயதிற்கேற்ற உடல் எடையை பராமரிக்க வேண்டும். வாரத்திற்கு 120 நிமிடங்களாவது உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். தினமும் 6 முதல் 7 மணி நேரம் உறக்கம் வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்கள், வருடத்திற்கு ஒரு முறை 'ஹெல்த் செக் அப்' செய்து கொள்வது நல்லது.போதை பழக்கம் வேண்டாமே!பிரியா, இருதய நல மருத்துவர், குப்புசாமி நாயுடு மருத்துவமனைஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடித்தாலே இதய பிரச்னைகள் வராமல் தடுக்க முடியும். புகைபிடித்தல், மதுப்பழக்கம் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். சர்க்கரை, ரத்த கொதிப்பு இருந்தால், அதனை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க, தேவையான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.புகைபிடிக்காதீங்க!டாக்டர் பாலாஜி, இருதயவியல் துறை தலைவர், ராமகிருஷ்ணா மருத்துவமனைபுகைபிடிக்காமல் இருக்க வேண்டும், கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவு தவிர்க்க வேண்டும், உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட வயதிற்கு மேல் தொடர் இருதய பரிசோதனை செய்ய வேண்டும். இருதயத்தில் சிறிய வலி இருந்தாலும் உடனே சிகிச்சை மேற்கொள்வது சிறந்தது.மன அழுத்தம் வேண்டாம்மோகன், இருதயவியல் நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர், கே.எம்.சி.ஹெச்.,சரியான உடல் எடை தேவை. மன அழுத்தம் ஏற்படாதவாறு குடும்ப சூழல் மற்றும் அலுவலக பணிகளை மேற்கொள்ள வேண்டும். தினமும், ஒரு மணி நேரமாவது நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, உணவு கட்டுப்பாடு அவசியம்.தவிர்க்க வேண்டியவை அருண், இருதய, நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணர், கே.ஜி.மருத்துவமனைபுகையிலை பழக்கம், சர்க்கரை, உடல் பருமன், ரத்த கொதிப்பு, வேலை செய்யாமல் இருப்பது, கொழுப்பு சத்து, மன அழுத்தம் போன்றவை இருதய பிரச்னைகளுக்கு முக்கிய காரணம். இவற்றை தவிர்த்து விட முடியும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X