பொது செய்தி

தமிழ்நாடு

மெட்ரோ ரயில் இருக்கையில் ஈரம்; பயணியர் சிரமம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
சென்னை : மெட்ரோ ரயில் இருக்கைகளில் ஈரத்தன்மையால், பயணியர் அமர்ந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.சென்னை 'மெட்ரோ' ரயில் பெட்டியில், பயணியர் போக்குவரத்துக்கு வசதிக்காக, 'ஏசி' இயங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என, மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துஉள்ளது.சில ரயில்களில் மதிய நேரங்களில் இருக்கைகள் ஈரத் தன்மையால் ஜில்லென மாறுகிறது. இதனால் பயணியர் அமர முடியாமல்

சென்னை : மெட்ரோ ரயில் இருக்கைகளில் ஈரத்தன்மையால், பயணியர் அமர்ந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.

சென்னை 'மெட்ரோ' ரயில் பெட்டியில், பயணியர் போக்குவரத்துக்கு வசதிக்காக, 'ஏசி' இயங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என, மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துஉள்ளது.சில ரயில்களில் மதிய நேரங்களில் இருக்கைகள் ஈரத் தன்மையால் ஜில்லென மாறுகிறது. இதனால் பயணியர் அமர முடியாமல் சிரமப்படுகின்றனர்.

மேலும், நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என பயப்படுகின்றனர்.எனவே, ஒவ்வொரு ரயில் பயணத்தின் துவக்கத்திலும், இருக்கைகள் மற்றும் உட்புறங்களில் ஈரமில்லாத வகையில் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 'ஏசி' குளிர் அளவு கட்டுப்பாட்டை, தேவைக்கேற்ப மாற்றி அமைக்கவும், நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X