பொது செய்தி

தமிழ்நாடு

சி.எம்.சி., காலனியில் 34 வீடுகள் இடிப்பு

Added : செப் 29, 2021
Share
Advertisement
கோவை:உக்கடம் மேம்பாலம் பணிக்காக, சி.எம்.சி., காலனியில், 34 வீடுகள் நேற்று இடித்து அகற்றப்பட்டன.உக்கடம் - ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் கட்டும் பணியை, மாநில நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்கிறது. ஆத்துப்பாலத்தில் இருந்து வருவோர் உக்கடத்தில் இறங்க, செல்வபுரம் பைபாஸில் இறங்கு தளம் கட்ட வேண்டும்.இதற்கு, டோபிகானா மற்றும் சி.எம்.சி., காலனி குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும். இதற்கு
 சி.எம்.சி., காலனியில்  34 வீடுகள் இடிப்பு

கோவை:உக்கடம் மேம்பாலம் பணிக்காக, சி.எம்.சி., காலனியில், 34 வீடுகள் நேற்று இடித்து அகற்றப்பட்டன.உக்கடம் - ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் கட்டும் பணியை, மாநில நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்கிறது. ஆத்துப்பாலத்தில் இருந்து வருவோர் உக்கடத்தில் இறங்க, செல்வபுரம் பைபாஸில் இறங்கு தளம் கட்ட வேண்டும்.இதற்கு, டோபிகானா மற்றும் சி.எம்.சி., காலனி குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும். இதற்கு தாமதம் ஏற்பட்டு வருவதால், பாலம் பணி முடங்கியிருக்கிறது.
இதையடுத்து, துாய்மை பணியாளர்களுக்கு, புல்லுக்காடு மைதானத்தில் தற்காலிக குடியிருப்பு கட்டிக் கொடுக்கப்படுகிறது. அவ்வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கியதை தொடர்ந்து, 34 வீடுகள், நேற்று இடிக்கப்பட்டன.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மாநில நெடுஞ்சாலைத்துறையினருக்கு பாலம் கட்டுவதற்கு தேயையான நிலத்தில் இருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. பாலம் பணி உடனடியாக துவங்கும். மற்ற வீடுகள் படிப்படியாக அகற்றப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X