சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியை கொன்ற திருப்பத்துார் வாலிபர் சென்னை நர்சிங் மாணவியுடன் மாயம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
போரூர் : திருப்பத்துாரில் மனைவியை எரித்து கொலை செய்த வாலிபர், சென்னை நர்சிங் மாணவியுடன் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.திருப்பத்துார் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு அதிகாரி ஒருவரின் மகள், சென்னை, போரூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரியில் நர்சிங் படித்து வருகிறார்.இவரை இரண்டு நாட்களாக காணவில்லை எனவும், அவரது மொபைல் போன் 'சுவிட்ச் ஆப்'

போரூர் : திருப்பத்துாரில் மனைவியை எரித்து கொலை செய்த வாலிபர், சென்னை நர்சிங் மாணவியுடன் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திருப்பத்துார் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு அதிகாரி ஒருவரின் மகள், சென்னை, போரூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரியில் நர்சிங் படித்து வருகிறார்.இவரை இரண்டு நாட்களாக காணவில்லை எனவும், அவரது மொபைல் போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது தந்தை போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில் 'திடுக்' தகவல் வெளியானது.விசாரணையில் தெரிய வந்ததாவது:திருப்பத்துாரில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தி வந்தவர் சத்தியமூர்த்தி, 30. இவர், 25ம் தேதி தன் மனைவி திவ்யாவிற்கு, பாலில் துாக்க மாத்திரை கலந்து கொடுத்து, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்துள்ளார்.

பின், தன் 3 வயது மகளுடன் தப்பிச் சென்றவர், வீடியோ பதிவு ஒன்றை வெளிட்டார்.அதில், 'தனக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டதால் சேர்ந்து வாழ முடியாது. மனைவியை பிரிந்து வாழ இயலாது என்பதால், மனைவியை தீ வைத்து கொளுத்தியதாகவும், தானும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும், தன்னை யாரும் தேட வேண்டாம்' என, அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.இதுதொடர்பாக, திருப்பத்துார் போலீசார் சத்தியமூர்த்தியை தேடி வருகின்றனர். இந்நிலையில், சென்னை, போரூர் வந்த சத்தியமூர்த்தி, காரை மருத்துவ கல்லுாரி வளாகத்தில் நிறுத்தி, நர்சிங் மாணவியை அழைத்து சென்றது தெரியவந்தது.

இந்த காட்சிகள் அனைத்தும், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. காரை பறிமுதல் செய்த போலீசார், சத்தியமூர்த்தி, மாணவியை எங்கு அழைத்துச் சென்றார் என விசாரிக்கின்றனர்.மாயமான இந்த மாணவி, கொலை செய்யப்பட்ட திவ்யாவின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. நர்சிங் மாணவியுடன் சேர்ந்து வாழ்வதற்காக, சத்தியமூர்த்தி தன் மனைவியை திட்டமிட்டு கொலை செய்தாரா, மாணவி கடத்தப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X