பொது செய்தி

தமிழ்நாடு

வருவாய் ஆய்வர் பணியிடம்; மாநகராட்சியில் உருவாக்குங்க!

Added : செப் 29, 2021
Share
Advertisement
கோவை:தமிழ்நாடு மாநகராட்சி அமைச்சு பணியாளர்கள் சங்க செயற்குழு கூட்டம், கோவையில் நடந்தது. அதில், நிறைவேற்றிய தீர்மானங்கள்:மாநகராட்சியில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்கள் பதவி உயர்வு பெற, கீழ்நிலை பதவிகளில், 5 ஆண்டுகள்/ 4 ஆண்டுகள்/ 2 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் என்கிற தகுதியை நீக்க வேண்டும். அனைத்து பதவிக்கும் சீனியாரிட்டியில் பதவி உயர்வு வழங்க வேண்டும். உதவி

கோவை:தமிழ்நாடு மாநகராட்சி அமைச்சு பணியாளர்கள் சங்க செயற்குழு கூட்டம், கோவையில் நடந்தது. அதில், நிறைவேற்றிய தீர்மானங்கள்:மாநகராட்சியில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்கள் பதவி உயர்வு பெற, கீழ்நிலை பதவிகளில், 5 ஆண்டுகள்/ 4 ஆண்டுகள்/ 2 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் என்கிற தகுதியை நீக்க வேண்டும். அனைத்து பதவிக்கும் சீனியாரிட்டியில் பதவி உயர்வு வழங்க வேண்டும். உதவி கமிஷனர் பணிக்கு, வருவாய்த்துறையில் இருந்து அயல் பணியாக, துணை கலெக்டர் அந்தஸ்திலான அதிகாரிகள் நியமிப்பதை நீக்க வேண்டும்.உதவியாளர் அந்தஸ்தில் வருவாய் ஆய்வர் என்கிற பதவியை உருவாக்க வேண்டும். துப்புரவு ஆய்வர் பதவிக்கு இளநிலை உதவியாளர்களை பணி மாறுதல் செய்துவிட்டு, அப்பணியிடங்களுக்கு ஓட்டுநர், பதிவுரு உதவியாளர்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர்களை பதவி உயர்வு மூலம் நியமிக்க வேண்டும்.இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X