பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் பல்கலைக்கு மூன்று தேசிய விருது

Added : செப் 29, 2021
Share
Advertisement
கோவை:இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மாநில வேளாண் பல்கலைகளின் துணைவேந்தர்கள் கூட்டம் நேற்று டில்லியில் நடந்தது. இதில், பசுமை வளாக விருது உட்பட மூன்று தேசிய விருதுகளை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக தலைவர் திரிலோச்சன் மொஹபத்ராவிடம் இருந்து தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் குமார் பெற்றுக்கொண்டார். தேசிய உயர்கல்வி திட்டத்தின் கீழ், இந்திய வேளாண்

கோவை:இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மாநில வேளாண் பல்கலைகளின் துணைவேந்தர்கள் கூட்டம் நேற்று டில்லியில் நடந்தது. இதில், பசுமை வளாக விருது உட்பட மூன்று தேசிய விருதுகளை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக தலைவர் திரிலோச்சன் மொஹபத்ராவிடம் இருந்து தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் குமார் பெற்றுக்கொண்டார். தேசிய உயர்கல்வி திட்டத்தின் கீழ், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலால் பசுமை மற்றும் துாய்மை வளாக போட்டி அக்., 2020ல் அறிவிக்கப்பட்டது. இவ்விருது, வீணான பொருட்களில் மறுசுழற்சி, மின்தேவைகளுக்கு மாற்று ஆற்றல், சுற்றுச்சூலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்துதல், பாடங்கள், ஆராய்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு தரவுகளை ஆராய்ந்து வழங்கப்படுகிறது. இதில், பசுமை துாய்மை வளாக விருது போட்டியில், தேசிய அளவில் இரண்டாவது இடத்தையும், முதுநிலை மாணவர்களுக்கான அகில இந்திய அளவில் நடந்த போட்டி தேர்வில் தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவர்கள் முறையே, தோட்டக்கலை வனவியல் மற்றும் வேளாண் பொறியியல் துறையின் கீழ் இரண்டு விருதுகளை பெற்றுள்ளனர்.இம்மூன்று விருதுகளும் நேற்று நடந்த துணைவேந்தர் கூட்டத்தில் துணைவேந்தர் குமார் பெற்றுக்கொண்டார். விருதுக்கு காரணமாக இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் அனைவரையும், துணைவேந்தர் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X