பொது செய்தி

தமிழ்நாடு

சீரியல் டைமுக்கு வருவியா? 'கட்டைய' தூக்கும்பெண்கள்

Added : செப் 29, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சி தேர்தல் அக்., 6 மற்றும் 9ம் தேதிகளில் நடக்கிறது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்காக போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தல் பிரசாரத்தில் பிசியாக இருக்கின்றனர்.கதரில் வெள்ளை சட்டை, வேஷ்டி கட்டி, மேலே கட்சி துண்டு என 'டிப்டாப்' ஆக வரும் வேட்பாளர்கள், ஆதரவாளர்களை வைத்து


காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சி தேர்தல் அக்., 6 மற்றும் 9ம் தேதிகளில் நடக்கிறது.
மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்காக போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தல் பிரசாரத்தில் பிசியாக இருக்கின்றனர்.கதரில் வெள்ளை சட்டை, வேஷ்டி கட்டி, மேலே கட்சி துண்டு என 'டிப்டாப்' ஆக வரும் வேட்பாளர்கள், ஆதரவாளர்களை வைத்து உற்சாகமாக பேச துவங்குகின்றனர்.காலையில் ஊரில் உள்ள கட்சி நிர்வாகிகளை பார்ப்பது, வேலைக்கு செல்லாத இளைஞர்களை கவனிப்பது என நேரத்தை கடக்கின்றனர்.

மதிய வேளையில் ஆட்டோவில் 'மைக் செட்' கட்டி, வீடு தோறும் வந்து ஓட்டு பிரசாரம் நடக்கிறது.வேலைக்கு சென்று, மாலையில் பெரும்பாலான மக்கள் வீடு திரும்பி விடுவதால் 6:00 மணிக்கு மேல் மீண்டும் கூட்டம் களைகட்டுகிறது.சிரித்த முகத்துடன் ஒவ்வொரு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி, 'உங்களை நம்பிதான் நிக்குறேன். ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைங்க' என உறுதி வாங்குகின்றனர்.ஒரு கட்சி வேட்பாளர் சென்ற சில நிமிடங்களில், அடுத்த கட்சி வேட்பாளர் வருகின்றனர். அவர்களும் கலகலவென பேசி ஓட்டு வேட்டையில் இறங்குகின்றனர்.

பின் சுயேச்சை ஒரு பக்கம் வருகிறார்.மாலை 6:00 மணிக்கு மேல், வீட்டு பெண்கள் 'சீரியல்' பார்ப்பதில் மும்முரமாக இருக்கின்றனர். அந்த நேரத்தில் ஒவ்வொரு வேட்பாளர்களாக வருவதால், எந்த சீரியலையும் முழுதாக பார்க்க முடியாமல் தவிக்கின்றனர்.இரவு 9:00 மணி வரை இப்படியே நடப்பதால் கடுப்பாகும் அவர்கள், கட்டையை துாக்கி அடிக்காத குறையாக, 'ப்ரி டைம்ல வரவேண்டியதுதானே. 'சீரியல் பாக்குற பிசி டைம்ல தான் வர்றதா' என கடுப்பாய் பேசுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X