பொது செய்தி

தமிழ்நாடு

 ரவுடிகள் பட்டியல் சேகரிப்பு தீவிரம்: யார்..பெ.நா.பாளையம் போலீசார் 'விறுவிறு'

Added : செப் 29, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் சரக போலீசார், பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் நபர்களை, ரவுடிகள் பட்டியலில் சேர்க்க தீவிரம் காட்டி வருகின்றனர்.தமிழகம் முழுவதும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன், மாநகர பகுதிகள் மற்றும்

பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் சரக போலீசார், பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் நபர்களை, ரவுடிகள் பட்டியலில் சேர்க்க தீவிரம் காட்டி வருகின்றனர்.தமிழகம் முழுவதும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன், மாநகர பகுதிகள் மற்றும் மாவட்டங்களில் விடிய, விடிய ரவுடிகள் கைது வேட்டை நடந்தது.

பழைய குற்றவாளிகள், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக உள்ளவர்கள், கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் உட்பட குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய அனைத்து ரவுடிகளையும் கைது செய்யும் நடவடிக்கையில், போலீஸ் உயரதிகாரிகள் நேரடியாக களமிறங்கியுள்ளனர்.கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உட்பட மேற்கு மண்டலத்தில், 600 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். கோவை புறநகர் பகுதியில் உள்ள, 37 போலீஸ் ஸ்டேஷன்களில், ரவுடிகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவர்களை கைது செய்யும் நடவடிக்கையும், தீவிரமாகி வருகிறது. கோவையில் கடந்த, 1982 முதல், 2017 வரை, 535 பேரை, ரவுடிகள் பட்டியலில் மாநகர போலீசார் இணைத்துள்ளனர். இதில், சிலர் இறந்து விட்டனர்; சிலர் திருந்தி வாழ்கின்றனர். அவர்களை தவிர, தற்போது உள்ள ரவுடிகளின் விபரங்களை, போலீசார் சேகரித்து வருகின்றனர்.பெரியநாயக்கன்பாளையம் சரக டி.எஸ்.பி., ராஜபாண்டியன் கூறியதாவது:பெரிய நாயக்கன்பாளையம் சரகத்துக்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம், துடியலுார், தடாகம் போலீஸ் ஸ்டேஷன்களில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில், குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள், அதாவது, ரவுடிகள் பட்டியலில் ஏற்கனவே உள்ள 30 பேரில், 22 பேரிடம் குற்றச்செயல்களில் ஈடுபட மாட்டோம் என, உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு பெறப்பட்டுள்ளன.

மீதமுள்ள, 8 பேரில், அவர்களுடைய உறுதிமொழி பத்திரம் நிலுவையில் உள்ளது; இருந்தும், குற்றச் செயல்களில் ஈடுபட்டால், உடனடியாக தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார். தவிர, கோவை மாவட்ட எஸ்.பி., செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில், பொது இடங்களில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில், குடிபோதையில் தவறு செய்தவர்கள், வேண்டுமென்றே குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதில், மேற்கண்ட மூன்று போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் இரு மாதங்களில், 329 பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்களிடம் உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்களை அடையாளம் காணும் பணியில், போலீசார் முழு வீச்சில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். பொது இடங்களில் வேண்டுமென்றே குற்றச்செயலில் ஈடுபடும் நபர்கள், ரவுடிகள் பட்டியலில் இணைக்கப்படுவர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X