பொது செய்தி

தமிழ்நாடு

கல்பாக்கத்தில் கைத்தறி கண்காட்சி

Added : செப் 29, 2021
Share
Advertisement
மாமல்லபுரம் : கல்பாக்கத்தில் வெளிமாநில கைவினை, கைத்தறி கண்காட்சி துவக்கப்பட்டுள்ளது.கல்பாக்கத்தில் இயங்கும், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், சென்னை அணுமின் நிலையம் உள்ளிட்ட அணுசக்தி நிறுவனங்களில், தமிழகம் மட்டுமின்றி, பிற மாநில பகுதியினர், விஞ்ஞானி, அலுவலர், ஊழியர் என பணிபுரிகின்றனர். அவர்கள், இத்துறை நகரிய பகுதிகளில் வசிக்கின்றனர்.வெளிமாநிலங்களின் கைவினை,
 கல்பாக்கத்தில் கைத்தறி கண்காட்சி

மாமல்லபுரம் : கல்பாக்கத்தில் வெளிமாநில கைவினை, கைத்தறி கண்காட்சி துவக்கப்பட்டுள்ளது.

கல்பாக்கத்தில் இயங்கும், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், சென்னை அணுமின் நிலையம் உள்ளிட்ட அணுசக்தி நிறுவனங்களில், தமிழகம் மட்டுமின்றி, பிற மாநில பகுதியினர், விஞ்ஞானி, அலுவலர், ஊழியர் என பணிபுரிகின்றனர். அவர்கள், இத்துறை நகரிய பகுதிகளில் வசிக்கின்றனர்.வெளிமாநிலங்களின் கைவினை, கைத்தறி வளர்ச்சி நிர்வாகங்கள், இப்பகுதியினரிடம் பல்வேறு வகை பொருட்கள் விற்க, விற்பனை கண்காட்சியை அவ்வப்போது நடத்தும்.தற்போது சரஸ்வதி பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து கொண்டாடப்பட உள்ள நிலையில், இத்தகைய கைவினை, கைத்தறி கண்காட்சி நடத்தப்படுகிறது.

குஜராத் மாநில கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழக கண்காட்சி, கல்பாக்கம் பெண்கள் விடுதியில் துவக்கி, அக்., 6 வரை, காலை 10:00 மணி முதல், இரவு 9:00 மணி வரை நடக்கிறது. கைத்தறி ஆடைகள், பிற பொருட்கள், 10 சதவீத தள்ளுபடியில் விற்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X