பொது செய்தி

தமிழ்நாடு

'அபராதம் விதித்தால் லாரிகள் ஓடாது'

Added : செப் 29, 2021
Share
Advertisement
ராயபுரம் : 'டிரெய்லர் உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில், தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்டால் வேலைநிறுத்தம் செய்வோம்' என, அனைத்து டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.அனைத்து டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. சங்க கூட்டமைப்பின்தலைவர் கோபி

ராயபுரம் : 'டிரெய்லர் உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில், தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்டால் வேலைநிறுத்தம் செய்வோம்' என, அனைத்து டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அனைத்து டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. சங்க கூட்டமைப்பின்தலைவர் கோபி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், 12 சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.இதுகுறித்து, கூட்டமைப்பு தலைவர் கோபி கூறியதாவது:டிரெய்லர் லாரிகள் அதிக பாரம் ஏற்றியதாக கடந்த வாரம், 7 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த லாரிகளில் சரக்குகள், துறைமுக சுங்க அதிகாரி ஆய்வுக்குப் பின்னரே வண்டிகளில் ஏற்றப்படுகின்றன. இருந்தும், அதிக பாரம் ஏற்றுவது தொடர்பாக வண்டி உரிமையாளர்களிடம் அபராதம் விதிப்பதை கண்டிக்கிறோம்.மத்திய - மாநில அரசுகள் தலையிட்டு, இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக பாரம் ஏற்றுவதாக தொடர்ந்து அபராதம் வசூலித்தால், வட்டார போக்குவரத்து அலுவலர்களை கண்டித்து அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X