தமிழ்நாடு

எல்லை சாலை திட்டம் வேகம் காட்டுப்பள்ளி - தச்சூர் பணிகள் துவக்கம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
சென்னை : சென்னை எல்லை சாலை திட்டத்தின் முதல் பகுதியான காட்டுப்பள்ளி - தச்சூர் இடையிலான சாலை பணிகள், இரண்டு மாதங்களில் துவங்கவுள்ளன. இதற்காக, தனியார் நிறுவனத்துடன், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், நுாறடி சாலை, சென்னை பை - பாஸ் சாலை, சென்னை வெளிவட்டச்சாலை ஆகியவை அமைக்கப்பட்டு
 எல்லை சாலை திட்டம்  வேகம் காட்டுப்பள்ளி - தச்சூர் பணிகள் துவக்கம்

சென்னை : சென்னை எல்லை சாலை திட்டத்தின் முதல் பகுதியான காட்டுப்பள்ளி - தச்சூர் இடையிலான சாலை பணிகள், இரண்டு மாதங்களில் துவங்கவுள்ளன.

இதற்காக, தனியார் நிறுவனத்துடன், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், நுாறடி சாலை, சென்னை பை - பாஸ் சாலை, சென்னை வெளிவட்டச்சாலை ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து, எதிர்கால போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில், எண்ணுார் அடுத்த காட்டுபள்ளி துறைமுகம் - மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி இடையே, சென்னை எல்லைச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மொத்தம், 133 கி.மீ.,க்கு இந்த சாலை, சென்னைக்கு வெளியே அமைக்கப்படவுள்ளது. இதன் வாயிலாக, துறைமுக சரக்கு வாகனங்கள் மட்டுமின்றி, தனியார் வாகனங்களும், குறைந்த நேரத்தில் பயணத்தை மேற்கொள்ள முடியும். ரூ. 2,100 கோடிசென்னை - கோல்கட்டா, சென்னை - பெங்களூரு, சென்னை - திருப்பதி, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் வகையில், இச்சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது.மாநில நெடுஞ்சாலைத்துறையின், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் வாயிலாக, ஆறு கட்டடங்களாக சாலை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. காட்டுப்பள்ளி - தச்சூர் இடையிலான, 25.4 கி.மீ.,க்கு இச்சாலை, ஆறுவழியாக அமைக்கப்பட உள்ளது.காட்டுப்பள்ளி அருகே, பகிங்ஹாம் கால்வாயை கடக்கும் வகையில், 1.40 கி.மீ.,க்கு மேம்பாலம் கட்டப்படவுள்ளது. தொடர்ந்து, மீஞ்சூர் - அனுப்பம்பட்டு இடையே, ரயில்வே மேம்பாலம் கட்டப்படவுள்ளது. மீஞ்சூர் - காட்டூர், மீஞ்சூர் - பொன்னேரி உட்பட ஏழு இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன. வாயலுார், அக்கரம்பேடு, மேட்டுப்பாளையம், ஆமூர், பஞ்சட்டி வழியாக பயணிக்கும் இச்சாலையில், கிராமங்களை கடக்கும் வகையில் சிறிய மேம்பாலங்களும் கட்டப்பட உள்ளன. சாலையின் இரண்டு புறங்களிலும் மழைநீர் கால்வாய்கள், மைய தடுப்புகள் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. இப்பணியை மேற்கொள்ள, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடம் 2,100 கோடி ரூபாய் கடனுதவி பெறப்பட்டுள்ளது.

கட்டுமான பணியை மேற்கொள்ள, டாடா நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் சாலை அமைக்கும் பணிகள் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ஒப்பந்தம்தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன பொது மேலாளர் ஞானசேகரன் கூறியதாவது:சென்னை எல்லை சாலை, முதற்கட்ட பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர் தேர்வு சமீபத்தில் முடிந்தது. தேர்வு செய்யப்பட்டுள்ள நிறுவனத்துடன், ஒப்பந்தம் கையெழுத்தாகும். இதற்காக, திட்ட மதிப்பீட்டில் ஐந்து சதவீதத்தை, அதாவது, 100 கோடி ரூபாய்க்கு மேல், அந்நிறுவனம் முன் வைப்பு தொகை செலுத்த வேண்டும். அதன் பின் பணிகள் துவங்க அனுமதிக்கப்படும். இரண்டு மாதங்களில் பணிகளை துவங்கி, மூன்று ஆண்டுகளில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நில எடுப்பு பணிகள் வேகமாக நடப்பதால், குறித்த காலத்திற்குள் இச்சாலை பயன்பாட்டிற்கு வரும்.இவ்வாறு அவர்கூறினார்.எல்லை சாலை முழு விபரம்!பிரிவு - துவங்கும் இடம் - முடியும் இடம் - கி.மீ.,முதல் கட்டம் - காட்டுப்பள்ளி - தச்சூர் - 25.4இரண்டாம் கட்டம் - தச்சூர் - திருவள்ளூர் புறவழிச்சாலை - 26.1மூன்றாம் கட்டம் - திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் - 30.1நான்காம் கட்டம் - ஸ்ரீபெரும்புதுார் - சிங்க பெருமாள் கோவில் - 23.8ஐந்தாம் கட்டம் - சிங்க பெருமாள் கோவில் - பூஞ்சேரி - 27.4

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X