பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை எல்லை சாலை திட்டம் வேகம் காட்டுப்பள்ளி - தச்சூர் இடையே பணி துவங்க ஏற்பாடு

Added : செப் 29, 2021
Share
Advertisement
சென்னை : சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், நுாறடி சாலை, சென்னை பை - பாஸ் சாலை, சென்னை வெளிவட்டச்சாலை ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து, எதிர்கால போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில், எண்ணுார் அடுத்த காட்டுபள்ளி துறைமுகம் - மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி இடையே, சென்னை எல்லைச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம், 133
 சென்னை எல்லை சாலை திட்டம் வேகம்   காட்டுப்பள்ளி - தச்சூர் இடையே பணி துவங்க ஏற்பாடு


சென்னை : சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், நுாறடி சாலை, சென்னை பை - பாஸ் சாலை, சென்னை வெளிவட்டச்சாலை ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன.

தொடர்ந்து, எதிர்கால போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில், எண்ணுார் அடுத்த காட்டுபள்ளி துறைமுகம் - மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி இடையே, சென்னை எல்லைச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம், 133 கி.மீ.,க்கு இந்த சாலை, சென்னைக்கு வெளியே அமைக்கப்படவுள்ளது. இதன் வாயிலாக, துறைமுக சரக்கு வாகனங்கள் மட்டுமின்றி, தனியார் வாகனங்களும், குறைந்த நேரத்தில் பயணத்தை மேற்கொள்ள முடியும். சென்னை - கோல்கட்டா, சென்னை - பெங்களூரு, சென்னை - திருப்பதி, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் வகையில், இச்சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது.மாநில நெடுஞ்சாலைத்துறையின், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் வாயிலாக, ஆறு கட்டடங்களாக சாலை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. காட்டுப்பள்ளி - தச்சூர் இடையிலான, 25.4 கி.மீ.,க்கு இச்சாலை, ஆறுவழியாக அமைக்கப்பட உள்ளது.காட்டுப்பள்ளி அருகே, பகிங்ஹாம் கால்வாயை கடக்கும் வகையில், 1.40 கி.மீ.,க்கு மேம்பாலம் கட்டப்படவுள்ளது. தொடர்ந்து, மீஞ்சூர் - அனுப்பம்பட்டு இடையே, ரயில்வே மேம்பாலம் கட்டப்படஉள்ளது. மீஞ்சூர் - காட்டூர், மீஞ்சூர் - பொன்னேரி உட்பட ஏழு இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன. வாயலுார், அக்கரம்பேடு, மேட்டுப்பாளையம், ஆமூர், பஞ்சட்டி வழியாக பயணிக்கும் இச்சாலையில், கிராமங்களை கடக்கும் வகையில் சிறிய மேம்பாலங்களும் கட்டப்படவுள்ளன. சாலையின் இரண்டு புறங்களிலும் மழை நீர் கால்வாய்கள், மைய தடுப்புகள் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

இப்பணியை மேற்கொள்ள, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடம் 2,100 கோடி ரூபாய் கடனுதவி பெறப்பட்டுள்ளது. கட்டுமான பணியை மேற்கொள்ள, 'டாடா' நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் சாலை அமைக்கும் பணிகள் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன பொது மேலாளர் ஞானசேகரன் கூறியதாவது:சென்னை எல்லை சாலை, முதற்கட்ட பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர் தேர்வு சமீபத்தில் முடிந்தது. தேர்வு செய்யப்பட்டுள்ள நிறுவனத்துடன், ஒப்பந்தம் கையெழுத்தாகும். நில எடுப்பு பணிகள் வேகமாக நடப்பதால், குறித்த காலத்திற்குள் இச்சாலை பயன்பாட்டிற்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X