புகார் பெட்டி - சென்னை.

Added : செப் 29, 2021
Share
Advertisement
பஸ் நிலையத்தில் 'கும்மிருட்டு'தாம்பரத்தில் இருந்து, பூந்தமல்லி, மாங்காடு, குன்றத்துார் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும், அனகாபுத்துார் பஸ் நிலையத்தில் இங்கு நின்று செல்கின்றன. சென்னைக்கு, தடம் எண்: 60 என்ற பேருந்தும் இயக்கப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்த பஸ் நிலையத்தின் பராமரிப்பு படுமோசமாக உள்ளது. நிலையத்தின் உட்பகுதியில், 10

பஸ் நிலையத்தில் 'கும்மிருட்டு'

தாம்பரத்தில் இருந்து, பூந்தமல்லி, மாங்காடு, குன்றத்துார் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும், அனகாபுத்துார் பஸ் நிலையத்தில் இங்கு நின்று செல்கின்றன. சென்னைக்கு, தடம் எண்: 60 என்ற பேருந்தும் இயக்கப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்த பஸ் நிலையத்தின் பராமரிப்பு படுமோசமாக உள்ளது.

நிலையத்தின் உட்பகுதியில், 10 மின் விளக்குகள் உள்ளன. அவற்றில், இரண்டு மட்டுமே எரிகிறது; மற்றவை பழுதாகி, பல மாதங்கள் ஆகின்றன. இரவு நேரங்களில், பயணியருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இதனால், இங்கு குற்றச்செயல்கள் அரங்கேறும் அபாயம் நிலவுகிறது.பஸ் நிலையத்தை பயன்படுத்தும், பெண்கள், மூத்த குடிமக்கள் நலன் கருதி, இங்கு எரியாத விளக்குகளுக்கு பதில், புதிய விளக்குகளை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X