பொது செய்தி

தமிழ்நாடு

மோசமான நிலையில் மின் கம்பங்கள் பல்லாவரத்தில் உயிர் பலி அபாயம் தென்சென்னை/

Added : செப் 29, 2021
Share
Advertisement
பல்லாவரம் : ஜமீன் பல்லாவரம், சுபம் நகரில், பல மின் கம்பங்கள் முழுவதுமாக சேதமடைந்து, எந்த நேரத்திலும் கீழே விழுந்து, விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளன. பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட, ஜமீன் பல்லாவரம், சுபம்நகரில், நுாற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன.இப்பகுதிகளில், 30 ஆண்டுகளுக்கு முன் நடப்பட்ட மின் கம்பங்களே இன்றளவிலும் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில், பல கம்பங்கள் முழுதுமாக

பல்லாவரம் : ஜமீன் பல்லாவரம், சுபம் நகரில், பல மின் கம்பங்கள் முழுவதுமாக சேதமடைந்து, எந்த நேரத்திலும் கீழே விழுந்து, விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளன.

பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட, ஜமீன் பல்லாவரம், சுபம்நகரில், நுாற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன.இப்பகுதிகளில், 30 ஆண்டுகளுக்கு முன் நடப்பட்ட மின் கம்பங்களே இன்றளவிலும் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில், பல கம்பங்கள் முழுதுமாக சேதமடைந்து, எந்த நேரத்திலும் கீழே விழும் நிலையில் உள்ளன.நம்மாழ்வார் தெரு,- கண்ணபிரான் தெரு, வாத்தியார் மாணிக்கம் தெரு, ஏழுமலை மேஸ்திரி தெரு ஆகிய தெருக்களில் உள்ள மின் கம்பங்கள், முழுதுமாக சேதமடைந்து,

கம்பத்தின் உள்ளே உள்ள இரும்பு கம்பிகள் துருப்பிடித்த நிலையில் வெளியே தெரிகின்றன.லேசான காற்று அடித்தாலே, கீழே விழும் நிலையில் உள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சத்துடன் வசிக்கும் நிலை உள்ளது.இது குறித்து, மின்வாரியத்தில் புகார் கொடுக்கப்பட்டது.பல மாதங்களுக்கு முன், அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். எனினும், இன்று வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விரைவில் பருவமழை துவங்க உள்ளதால், மின் கம்பங்கள் சரிந்து விழுந்தால், உயிர் பலி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X