திறந்த நிலையில் பாதாள சாக்கடை

Added : செப் 29, 2021
Share
Advertisement
பல்லாவரம் : ஜமீன் பல்லாவரத்தில், பாதாள சாக்கடை குழாயில் மூடி இல்லாததால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, கொசு தொல்லை அதிகரித்துள்ளது. இதனால், 'டெங்கு' காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல்லாவரம் நகராட்சி, அம்பேத்கர் நகர்,ஏழுமலை மேஸ்திரி தெருவில், 25 குடியிருப்புகள் உள்ளன. இத்தெருவில், மூன்று ஆண்டுகளுக்கு முன், பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்டு, இணைப்பு

பல்லாவரம் : ஜமீன் பல்லாவரத்தில், பாதாள சாக்கடை குழாயில் மூடி இல்லாததால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, கொசு தொல்லை அதிகரித்துள்ளது.

இதனால், 'டெங்கு' காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல்லாவரம் நகராட்சி, அம்பேத்கர் நகர்,ஏழுமலை மேஸ்திரி தெருவில், 25 குடியிருப்புகள் உள்ளன. இத்தெருவில், மூன்று ஆண்டுகளுக்கு முன், பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்டு, இணைப்பு வழங்கப்பட்டது. அப்போது, சாலையின் நடுவில் உள்ள பாதாளச் சாக்கடையின் வாய்ப்பகுதியில், மூடி போடாமல் விட்டு விட்டனர். இன்று வரை மூடி இல்லாமல், திறந்த நிலையிலேயே குழாய் உள்ளது. அதன் வழியாகவே, குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவும் செல்கிறது.இதனால், துர்நாற்றமும், கொசு தொல்லையும் பல மடங்கு அதிகரித்து,

அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். தொற்று நோய் பரவும் சூழல் நிலவுவதால், டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சல் பரவும் முன், பாதாள சாக்கடை குழாய் மீது மூடி அமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X