பேசின்பாலத்தில் 2 ரவுடிகள் சிக்கினர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பேசின்பாலத்தில் 2 ரவுடிகள் சிக்கினர்

Added : செப் 29, 2021
Share
பேசின்பாலம் : பேசின்பாலத்தில், இரண்டு ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.தமிழகம் முழுதும் 'ஸ்டார்மிங் ஆப்பரேஷன்' நடத்தி, போலீசார் ரவுடிகளை கைது செய்து வருகின்றனர்.அந்த வகையில் சென்னையில், போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி, சந்தேக நபர்களை பிடித்து விசாரிக்கின்றனர்.இதில் நேற்று, பேசின்பாலம் போலீசார் புளியந்தோப்பு போக்குவரத்து வட்டார அலுவலகம் அருகே, வாகன சோதனையில்

பேசின்பாலம் : பேசின்பாலத்தில், இரண்டு ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.தமிழகம் முழுதும் 'ஸ்டார்மிங் ஆப்பரேஷன்' நடத்தி, போலீசார் ரவுடிகளை கைது செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சென்னையில், போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி, சந்தேக நபர்களை பிடித்து விசாரிக்கின்றனர்.இதில் நேற்று, பேசின்பாலம் போலீசார் புளியந்தோப்பு போக்குவரத்து வட்டார அலுவலகம் அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது இருசக்கர வாகனங்களில் சென்ற சந்தேக நபர்கள் இருவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த கதிரவன், 28, ரகுபதி, 28, என்பதும், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தலைமறைவு ரவுடிகள் என்பதும் தெரிந்தது.இதையடுத்து, பேசின்பாலம் போலீசார் அவர்களை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X