தமிழ்நாடு

தாம்பரத்தில் பள்ளி மாணவர்களுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு

Added : செப் 29, 2021
Share
Advertisement
தாம்பரம் : பள்ளி மாணவர்களுக்கு, தாம்பரம் போலீசார் சார்பில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று நடந்தது.தாம்பரம் போலீசார் சார்பில், மேற்கு தாம்பரத்தில் உள்ள, தனியார் பள்ளியில், போதை பொருள் ஒழிப்பு குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. 'அடாப்ட் ஹோம்' எனும் போதை மீட்பு மற்றும் மனநல மறுவாழ்வு மையம் சார்பில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில்,
 தாம்பரத்தில் பள்ளி மாணவர்களுக்கு  போதை ஒழிப்பு விழிப்புணர்வு

தாம்பரம் : பள்ளி மாணவர்களுக்கு, தாம்பரம் போலீசார் சார்பில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று நடந்தது.

தாம்பரம் போலீசார் சார்பில், மேற்கு தாம்பரத்தில் உள்ள, தனியார் பள்ளியில், போதை பொருள் ஒழிப்பு குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. 'அடாப்ட் ஹோம்' எனும் போதை மீட்பு மற்றும் மனநல மறுவாழ்வு மையம் சார்பில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தாம்பரம் உதவி கமிஷனர் சீனிவாசன் மற்றும் சட்டம் - ஒழுங்கு காவல்ஆய்வாளர் சார்லஸ் பங்கேற்றனர். இதில், கஞ்சா, மது உள்ளிட்ட போதை வஸ்துக்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதன் வாயிலாக நடக்கும் குற்ற சம்பவங்கள் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

'அடாப்ட் ஹோம்' மையம் சார்பில், பங்கேற்ற டாக்டர்கள் குழுவினர், மாணவர்களுக்கு மூளையை சுறுசுறுப்பாக வைத்து கொள்வது குறித்து, சிறிய உடற்பயிற்சியை செய்து காண்பித்தனர்.மேலும், 'ஆன்லைன்' விளையாட்டுக்களால், உடல் மற்றும் மனதளவில் மாணவர்கள் பாதிக்கப்படுவது, பெற்றோர்களுக்கு தெரியாமல் பின்பற்றும், தீய பழக்க வழக்கங்களால், அவர்களின் கற்றல் திறனில் ஏற்படும் குறைபாடுகள் குறித்தும், அறிவுரை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X