புகார் பெட்டி - வாடிக்கையாளர் தவிப்பு| Dinamalar

புகார் பெட்டி - வாடிக்கையாளர் தவிப்பு

Added : செப் 29, 2021
Share
வங்கியில் இயந்திரம் பழுது வாடிக்கையாளர் தவிப்புசென்னை, உள்ளகரம், சபாபதி தெருவில், ஐ.ஓ.பி., எனப்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை இயங்கி வருகிறது. இந்த கிளையில், ஆயிரக்கணக்கானோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த கிளையில், வாடிக்கையாளர்கள் வசதிக்காக, 'பாஸ்புக்' பதிவு செய்வதற்கு, தானியங்கி இயந்திரம் அமைக்கப்பட்டது.வங்கிப் பணியாளரின் தயவின்றி, வாடிக்கையாளர்கள்

வங்கியில் இயந்திரம் பழுது வாடிக்கையாளர் தவிப்புசென்னை, உள்ளகரம், சபாபதி தெருவில், ஐ.ஓ.பி., எனப்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை இயங்கி வருகிறது.

இந்த கிளையில், ஆயிரக்கணக்கானோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த கிளையில், வாடிக்கையாளர்கள் வசதிக்காக, 'பாஸ்புக்' பதிவு செய்வதற்கு, தானியங்கி இயந்திரம் அமைக்கப்பட்டது.வங்கிப் பணியாளரின் தயவின்றி, வாடிக்கையாளர்கள் நேரடியாக தங்களின் வரவு, செலவுகளை கணக்கு புத்தகத்தில் பதிவு செய்து வந்தனர். கடந்த ஆண்டு மழை பெய்த போது, வங்கியில் தண்ணீர் புகுந்து அந்த இயந்திரம் பழுதடைந்தது.இதுவரை அந்த இயந்திரம் சரி செய்யப்படாத தால், மூத்த குடிமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள், சிரமப்படும் நிலை உள்ளது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பாஸ்புக் 'என்ட்ரி' செய்யும் இயந்திரத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X