எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

கத்திவாக்கம் நூலகத்திற்கு உயிர் கிடைக்குமா? 40 ஆயிரம் புத்தகங்களுக்கு சமாதி கட்ட முயற்சி

Updated : செப் 29, 2021 | Added : செப் 29, 2021
Share
Advertisement
எண்ணுார் : வைர விழா காண உள்ள கத்திவாக்கம் கிளை நுாலகம், பராமரிப்பின்றி பாழடைந்து வருகிறது. இங்கு, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களின் நிலைமை படுமோசமாக உள்ளதாக, வாசகர்கள் வேதனை தெரிவித்துஉள்ளனர்.சென்னை, எண்ணுார், கத்திவாக்கம் பஜாரில், திருவள்ளூர் மாவட்ட ஆணைக் குழுவின் கீழ் இயங்கும், கிளை நுாலகம் உள்ளது. இது, 1962ல் துவக்கப்பட்டது. இந்த நுாலகத்தில், இலக்கியம், நாவல்கள்
கத்திவாக்கம், நூலகம், புத்தகங்கள், சமாதி, முயற்சி

எண்ணுார் : வைர விழா காண உள்ள கத்திவாக்கம் கிளை நுாலகம், பராமரிப்பின்றி பாழடைந்து வருகிறது. இங்கு, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களின் நிலைமை படுமோசமாக உள்ளதாக, வாசகர்கள் வேதனை தெரிவித்துஉள்ளனர்.

சென்னை, எண்ணுார், கத்திவாக்கம் பஜாரில், திருவள்ளூர் மாவட்ட ஆணைக் குழுவின் கீழ் இயங்கும், கிளை நுாலகம் உள்ளது. இது, 1962ல் துவக்கப்பட்டது. இந்த நுாலகத்தில், இலக்கியம், நாவல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. நுாலகத்தில், 4,290 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.சுற்றுவட்டாரத்தில் உள்ள அரசு, மாநகராட்சி பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த பல ஆயிரம் மாணவர்கள், இந்த நுாலகத்தை பயன்படுத்தி வருகின்றனர். நுாலக கட்டடம், 600 சதுர அடி மட்டுமே உள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான புத்தகங்களை அடுக்கவும் இடமில்லை; வாசகர்கள் அமர்ந்து படிக்கவும் வசதியில்லை.

கட்டடம் கட்டப்பட்டு, 60வது ஆண்டை நெருங்கும் நிலையில், முற்றிலும் பழுதடைந்திருப்பதால், மழை நீர் கசிந்து புத்தகங்கள் வீணாகும் சூழல் உள்ளது.வேறு வழியின்றி, புத்தகங்களை மழை நீர் கசியாத இடங்களில், மூட்டை, மூட்டையாக கட்டி வைத்துள்ளனர். தவிர, நுாலக கட்டடம் தெரியாத அளவில், பூக்கடை உட்பட பல்வேறு ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.எனவே, புதிய நுாலக கட்டடம் கட்டித் தர வேண்டும் என, கோரிக்கை வலுத்தது.

அதன்படி, 2016 - 17ல், அப்போதைய திருவொற்றியூர் எம்.எல்.ஏ., கே.பி.பி.சாமி, தன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 55 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்திருந்தார். பொதுப்பணித் துறையால், முதல் தளத்துடன் கூடிய கட்டடத்திற்கு, திட்ட மதிப்பீடு செய்யும் பணிகளும் நடந்தது.ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் சிலர், நெடுஞ்சாலை விரிவாக்கம், இடம் பற்றாக்குறை மற்றும் கட்டுமான பணியை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும் என, பல காரணங்களை சுட்டிக்காட்டி, நுாலக கட்டடம் கட்டும் பணியை கிடப்பில் போட்டதாக கூறப்படுகிறது. ஓராண்டாக பணிகள் துவக்கப்படவில்லை. நிதி காலாவதியாகி விடும் என்பதால், டிச., 2018ல், வேறு பணிகளுக்கு நிதியை மாற்றி ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இருப்பினும், அதே நிதியாண்டில் நுாலக கட்டட பணிகளை மேற்கொள்ள உதவிடுமாறு, எம்.எல்.ஏ., கோரியிருந்தார்.பின், உடல் நலம் குன்றி, பிப்., 2020ல் அவர் காலமானார். தொடர்ந்து, நுாலக கட்டட பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன.இதனிடையே, பல ஆயிரம் பேர் பயன்படுத்தும் நுாலகத்திற்கு, புதிய கட்டடம், அதே பகுதியில் கட்டி தர வேண்டும் என, மீண்டும் கோரிக்கை வலுத்துள்ளது.புதிய நுாலக கட்டட பணிகளுக்கு இடப்பற்றாக்குறை, நெடுஞ்சாலை விரிவாக்கம் காரணமாக கருதப்பட்டால், பின்புறம் மாநகராட்சி வசம் உள்ள இடங்களையும் பயன்படுத்தி, விசாலமான வகையில் கட்டடம் கட்டலாம் என, பலரும் யோசனை தெரிவிக்கின்றனர்.

கத்திவாக்கம் கிளை நுாலகத்தில், ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. அவற்றை படிக்க மக்கள் ஆர்வம் காட்டினாலும், போதிய இடமின்மை, கட்டடம் பழுது காரணமாக, நுாலகத்தை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.


latest tamil news




ர.நிலவழகன், 27,

சமூக ஆர்வலர், எண்ணுார்.


இந்த நுாலகம், 1962ல் அப்போதைய முதல்வர் பக்தவச்சலத்தால் திறந்து வைக்கப்பட்டது. இப்பகுதியைச் சேர்ந்த, பள்ளி மாணவர்களுக்கு, நுாலகம் மிகவும் வசதியாக இருந்தது. இடப்பற்றாக்குறையால், ஐந்து பேர் கூட உள்ளே அமர முடிவதில்லை. நுாலக கட்டட பராமரிப்பிற்காக பலர் உதவியுள்ளனர். இருப்பினும், தற்போதைய நிலை கவலை அளிக்கிறது.


latest tamil news




சி. செல்வம், 50,

முன்னாள் வாசகர் வட்ட தலைவர், எண்ணுார்.


கத்திவாக்கம் கிளை நுாலக கட்டட விவகாரம் பற்றி அறிவேன். உடனடியாக ஆய்வு செய்து, புதிய கட்டடம் கட்டி தர வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன். விரைவில், மாணவர்கள், வாசகர்கள் பயன்பெறும் வகையில், புதிய கிளை நுாலக கட்டடம் பயன்பாட்டிற்கு வர, ஆவண செய்வேன்.


latest tamil news




கே.பி.சங்கர், 48,

எம்.எல்.ஏ., திருவொற்றியூர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X