பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா விதிமீறல் மாடம்பாக்கத்தில் அபராதம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
மாடம்பாக்கம் : மாடம்பாக்கத்தில், முக கவசம் அணியாதவர்களுக்கு, பேரூராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்படுகிறது. தாம்பரம் அருகே உள்ள மாடம்பாக்கம் பேரூராட்சி, மாடம்பாக்கம், நுாத்தஞ்சேரி, பதுவஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியது. இங்குள்ள, 15 வார்டுகளில், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கடைகள் மற்றும் அடுக்குமாடி

மாடம்பாக்கம் : மாடம்பாக்கத்தில், முக கவசம் அணியாதவர்களுக்கு, பேரூராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்படுகிறது.

தாம்பரம் அருகே உள்ள மாடம்பாக்கம் பேரூராட்சி, மாடம்பாக்கம், நுாத்தஞ்சேரி, பதுவஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியது. இங்குள்ள, 15 வார்டுகளில், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கடைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில், கொரோனா தடுப்பு விதிமுறைகள் பற்றி, பேரூராட்சி ஊழியர்கள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். முக்கிய சந்திப்புகளில், முக கவசம் அணியாமல் சுற்றித்திரியும் நபர்களுக்கு, போலீசார் உதவியுடன், பேரூராட்சி ஊழியர்கள் அபராதம் விதித்து வருகின்றனர். இதன்படி, இரண்டு மாதங்களில், 21 ஆயிரம் ரூபாய் வரை, அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X