பொது செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய கவுன்சிலர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
சூலுார்:ஒன்றிய கவுன்சிலர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம், நாளை பவானிசாகரில் துவங்குகிறது.கோவை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல், 2019 டிசம்பரில் நடந்தது. ஜனவரியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பொறுப்பேற்றனர். ஊராட்சி தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு, கடந்தாண்டு துவக்கத்தில், அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஆனால், யூனியன்

சூலுார்:ஒன்றிய கவுன்சிலர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம், நாளை பவானிசாகரில் துவங்குகிறது.கோவை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல், 2019 டிசம்பரில் நடந்தது. ஜனவரியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பொறுப்பேற்றனர். ஊராட்சி தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு, கடந்தாண்டு துவக்கத்தில், அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஆனால், யூனியன் சேர்மன் மற்றும் கவுன்சிலர்களுக்கு அடிப்படை பயிற்சி அளிக்கப்படாமல் இருந்தது.கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு, சட்டசபை பொதுத்தேர்தல் உட்பட காரணங்களால் பயிற்சி முகாம் நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், யூனியன் தலைவர்கள், கவுன்சிலர்களுக்கு தனித்தனியாக பயிற்சி முகாம் நடத்த, ஊரக வளர்ச்சித்துறை முடிவு செய்தது.அதன்படி, கோவை மாவட்டத்தை சேர்ந்த யூனியன் கவுன்சிலர்களுக்கு, இரு கட்டங்களாக பவானிசாகரில் உள்ள மண்டல ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தில், இரு நாட்கள் பயிற்சி முகாம் நடக்கிறது. நாளை துவங்கும் பயிற்சி முகாமில் பங்கேற்க, சூலுார், தொண்டாமுத்துார், காரமடை, எஸ்.எஸ்.குளம், மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், கிணத்துக்கடவு யூனியன்களை சேர்ந்த, 65 கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X