பொது செய்தி

தமிழ்நாடு

மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு

Added : செப் 29, 2021
Share
Advertisement
அன்னுார்:அன்னுாரில் மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு நடந்தது.கோவை மாவட்ட ஊராட்சி வார்டு எண் 3ல், மாவட்ட கவுன்சிலர் தேர்தல், வரும் 9ம் தேதி நடக்கிறது. இதற்காக, 100 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுச்சாவடிக்கு தேர்தல் பொருட்களை வழங்கவும், தேர்தல் முடிந்த பின் ஓட்டுப் பெட்டிகளை பெற்று, ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லவும், எட்டு மண்டல
 மண்டல அலுவலர்களுக்கு  தேர்தல் பயிற்சி வகுப்பு

அன்னுார்:அன்னுாரில் மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு நடந்தது.கோவை மாவட்ட ஊராட்சி வார்டு எண் 3ல், மாவட்ட கவுன்சிலர் தேர்தல், வரும் 9ம் தேதி நடக்கிறது. இதற்காக, 100 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுச்சாவடிக்கு தேர்தல் பொருட்களை வழங்கவும், தேர்தல் முடிந்த பின் ஓட்டுப் பெட்டிகளை பெற்று, ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லவும், எட்டு மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு குழுவிலும், அலுவலர், உதவியாளர், அலுவலக உதவியாளர், டிரைவர் என, நான்கு பேர் உள்ளனர். எட்டு குழுக்களுக்கு ஓட்டுச்சாவடிகள் பிரித்து ஒதுக்கப்பட்டுள்ளன. மண்டல அலுவலர்களுக்கு, நேற்று, அன்னுார் ஒன்றிய அலுவலகத்தில் பயிற்சி நடந்தது.உதவி தேர்தல் அலுவலர் முத்துக்குமாரசாமி பேசியதாவது:தேர்தல் நடக்கும் போது எந்த பிரச்னை ஏற்பட்டாலும், உடனடியாக தேர்தல் அலுவலர் அல்லது உதவி தேர்தல் அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் ஓட்டுப்பதிவை நிறுத்தக்கூடாது. காவல்துறைக்கும் உடனே பிரச்னை குறித்து தெரிவிக்க வேண்டும். ஒன்றிய அலுவலகத்தில் இருந்து தேர்தல் பொருட்களை பரிசோதித்து பெற வேண்டும். அவற்றை ஓட்டுச்சாவடிகளில் குறிப்பிட்ட நேரத்துக்குள் விநியோகிக்க வேண்டும். தேர்தல் முடிந்தவுடன் ஓட்டுச்சாவடிகளில் படிவங்களை பெறும்போது, முறையாக நிரப்பப்பட்டு உள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.வட்டார வளர்ச்சி அலுவலர் நவமணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா செல்வம், முத்துராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X