பொது செய்தி

தமிழ்நாடு

155 கிராமங்களின் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு! நடந்து வருகிறது சோதனை ஓட்டம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்;அன்னுார், அவிநாசி, சூலுார் ஆகிய பகுதிகளின், கூட்டு குடிநீர் திட்டத்தின் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. அதனால், இப்பகுதிகளில் நிலவும் குடிநீர் பற்றாக்குறை பிரச்னைக்கு, விரைவில் தீர்வு கிடைக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.கோவை மாவட்டத்தில் உள்ள அன்னுார், மோப்பெரிபாளையம் பேரூராட்சிகள், திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, சூலுார், சூலுார் ஏர்போர்ஸ்,
 155 கிராமங்களின் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு! நடந்து வருகிறது சோதனை ஓட்டம்

மேட்டுப்பாளையம்;அன்னுார், அவிநாசி, சூலுார் ஆகிய பகுதிகளின், கூட்டு குடிநீர் திட்டத்தின் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. அதனால், இப்பகுதிகளில் நிலவும் குடிநீர் பற்றாக்குறை பிரச்னைக்கு, விரைவில் தீர்வு கிடைக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.கோவை மாவட்டத்தில் உள்ள அன்னுார், மோப்பெரிபாளையம் பேரூராட்சிகள், திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, சூலுார், சூலுார் ஏர்போர்ஸ், பல்லடம், திருப்பூர் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள, 155 வழியோர கிராமங்கள் பயன்பெறும் வகையில், கூட்டு குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டது. திட்டத்துக்கு, 241 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. 2018ம் ஆண்டு இப்பணிகள் துவங்கின. 2020 ஏப்ரல் மாதம் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டது. கொரோனா பிரச்னையால் பணிகளில் தொய்வு ஏற்பட்டு, தற்போது பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. திட்டத்தின் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:அன்னுார், அவிநாசி மோப்பெரிபாளையம், சூலுார் கூட்டு குடிநீர் திட்டம், நபார்டு, ஆர்.ஐ.டி.எப்., திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறுமுகை வச்சினம்பாளையம் அருகே, பாறைத்துறை பகுதியில், பவானி ஆற்றிலிருந்து நீர் எடுக்க, நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. இங்கிருந்து பம்பிங் செய்யப்படும் நீர், வையாளிபாளையத்தில் நிலமட்ட தொட்டியில் தேக்கி வைக்க, நீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து பம்பிங் செய்யும் நீர், அன்னுார் கைகாட்டியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தம் செய்யப்பட உள்ளது. சுத்திகரிப்பு நிலையத்துக்கு, இன்னும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. மற்ற இரு இடங்களுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.பவானி ஆற்றிலிருந்து, 18 கி.மீட்டருக்கு, பிரதான இரும்பு குழாய் பதிக்கப்பட்டுள்ளது. மேலும், 77 கிலோ மீட்டருக்கு, சிறிய அளவிலான இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. சுத்திகரிக்கப்படும் நீர், அன்னுார், அவிநாசிக்கு தனியாகவும், சூலுார், பல்லடத்துக்கு தனியாகவும் அனுப்பப்படுகிறது.திட்ட நீரை தேக்கி வைக்க, ஆறு இடங்களில் தரைமட்ட தொட்டிகளும், 17 இடங்களில் மேல்நிலை தொட்டிகளும் கட்டப்பட்டுள்ளன. பவானி ஆற்றில் இருந்து நாளொன்றுக்கு, இரண்டு கோடியே, 21 லட்சத்து, 20 ஆயிரம் லிட்டர் நீர் பம்பிங் செய்யப்படுகிறது. சுத்தம் செய்யாத நீர், நீரேற்று நிலையம், சுத்திகரிப்பு நிலையம் தரைமட்ட மற்றும் மேல்நிலை தொட்டிகளில் தேக்கி வைக்கப்பட உள்ளது. அதற்காக கடந்த ஒரு வாரமாக சோதனை ஓட்டம் நடக்கிறது. இதனால், குழாய்கள், தொட்டிகள் சுத்தம் செய்வதோடு, குழாய்களில் ஏதேனும் உடைப்பு உள்ளதா, குடிநீர் தொட்டிகளில் கசிவு உள்ளதா எனவும் கண்டறியப்படும்.அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில், திட்டம், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு துவக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திட்டத்தால், அன்னூர், அவிநாசி, மோப்பெரிபாளையம், சூலுார், பல்லடம் மற்றும் வழியோர, 155 கிராமங்களில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X