பொது செய்தி

தமிழ்நாடு

சாலை விபத்தில் மாணவர் பலி

Added : செப் 29, 2021
Share
Advertisement
ஈஞ்சம்பாக்கம் : கிழக்கு கடற்கரை சாலையில், கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், கல்லுாரி மாணவர் உயிரிழந்தார். சென்னை, பாலவாக்கத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித், 20; கல்லுாரி மாணவர். நேற்று இருசக்கர வாகனத்தில், கோவளம் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.ஈஞ்சம்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, வளைவில் கட்டுப்பாட்டை இழந்த

ஈஞ்சம்பாக்கம் : கிழக்கு கடற்கரை சாலையில், கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், கல்லுாரி மாணவர் உயிரிழந்தார். சென்னை, பாலவாக்கத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித், 20; கல்லுாரி மாணவர். நேற்று இருசக்கர வாகனத்தில், கோவளம் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.ஈஞ்சம்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, வளைவில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலை மையத்தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் துாக்கி வீசப்பட்ட ரஞ்சித், 'ஹெல்மெட்' அணியாததால் தலையில் பலத்த அடிப்பட்டு, சம்பவ இடத்திலேயே இறந்தார்.அவரின் உடலை, போலீசார் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து, அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X