பொது செய்தி

தமிழ்நாடு

பாரம்பரிய நினைவு சின்னம் பட்டியலில் புதிதாக 5 இடம்

Updated : செப் 29, 2021 | Added : செப் 29, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : தமிழக பாரம்பரிய நினைவு சின்னங்கள் பட்டியலில், விரைவில் ஐந்து இடங்கள் சேர உள்ளன.வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுகள், கட்டடக்கலை உள்ள இடங்களை, தமிழக தொல்லியல் துறை, பாரம்பரிய நினைவு சின்னங்களாக அறிவித்து பாதுகாத்து வருகிறது. அந்த வகையில் மதுரையில் 16, காஞ்சிபுரத்தில் 12, விழுப்புரத்தில் 11, திருச்சியில் ஏழு, வேலுாரில் ஆறு, தஞ்சை, திருவண்ணாமலையில் தலா
தமிழகம், தமிழ்நாடு, பாரம்பரிய நினைவு சின்னம்

சென்னை : தமிழக பாரம்பரிய நினைவு சின்னங்கள் பட்டியலில், விரைவில் ஐந்து இடங்கள் சேர உள்ளன.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுகள், கட்டடக்கலை உள்ள இடங்களை, தமிழக தொல்லியல் துறை, பாரம்பரிய நினைவு சின்னங்களாக அறிவித்து பாதுகாத்து வருகிறது. அந்த வகையில் மதுரையில் 16, காஞ்சிபுரத்தில் 12, விழுப்புரத்தில் 11, திருச்சியில் ஏழு, வேலுாரில் ஆறு, தஞ்சை, திருவண்ணாமலையில் தலா ஐந்து இடங்கள் பாரம்பரிய நினைவு சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதேபோல, துாத்துக்குடியில் நான்கு, நெல்லை, திருவள்ளூரில் மூன்று, அரியலுாரில் மூன்று, கடலுார், திண்டுக்கல், கரூர், நாகை, ராமநாதபுரம், சிவகங்கை, கரூரில், தலா இரண்டு மற்றும் சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், விருதுநகர் ஆகிய இடங்களில் தலா ஒன்று என, மொத்தம் 89 இடங்கள், பாரம்பரிய நினைவு சின்னங்களாக பாதுகாக்கப்படுகின்றன.


latest tamil news



இந்நிலையில், மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி, முதலைக்குளம்; விழுப்புரம் மாவட்டம் முதுண்டூர்; தர்மபுரி மாவட்டம் நகனம்பட்டி; சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி ஆகிய ஐந்து இடங்களில் உள்ள பழமையான கல்வெட்டுகளை, தமிழக தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வலியுறுத்தி அறிக்கை அனுப்பியுள்ளனர். இவை விரைவில், பாரம்பரிய நினைவுச் சின்னங்களின் பட்டியலில் இடம் பிடிக்க உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
29-செப்-202108:57:13 IST Report Abuse
 Muruga Vel பொது மக்களுக்கு இவற்றை பராமரிக்கும் எண்ணம் வராமல் இருப்பது கவலையாக இருக்கிறது ..புராதன கோவில் சிற்பங்களில் எண்ணெயை கொட்டுவது ..குங்குமம் விபூதி கொட்டுவது ..மிக அற்புதமான சிற்பங்களில் கல்லை எரிந்து சேதப்படுத்துவது .. சப்தஸ்வரங்கள் வரும் கல் தூண்களில் கருங்கல் விட்டெறிவது ..கேரளா பரவாயில்லை ...நன்கு பராமரிக்கிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X