பொது செய்தி

தமிழ்நாடு

'பொருளாதார வளர்ச்சிக்கு உயர் கல்வி தான் அடிப்படை'

Added : செப் 29, 2021
Share
Advertisement
சென்னை : ''நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, உயர் கல்வி தான் அடிப்படையாக உள்ளது,'' என, வி.ஐ.டி., பல்கலை வேந்தர் விஸ்வநாதன் பேசினார்.வேலுார், வி.ஐ.டி., பல்கலையில், 36வது பட்டமளிப்பு விழா, காணொலி வாயிலாக நடந்தது. சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:மாணவர்கள் பாடங்களை ஆழ படித்து, அதன் நுணுக்கங்களை தெரிந்து கொள்ள
 'பொருளாதார வளர்ச்சிக்கு உயர் கல்வி தான் அடிப்படை'

சென்னை : ''நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, உயர் கல்வி தான் அடிப்படையாக உள்ளது,'' என, வி.ஐ.டி., பல்கலை வேந்தர் விஸ்வநாதன் பேசினார்.வேலுார், வி.ஐ.டி., பல்கலையில், 36வது பட்டமளிப்பு விழா, காணொலி வாயிலாக நடந்தது.

சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:மாணவர்கள் பாடங்களை ஆழ படித்து, அதன் நுணுக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டும். நாம் செய்யும் அனைத்து முயற்சிகளும், வாழ்வில் நம்மை கைதேர்ந்தவர்களாக அடையாளப்படுத்த துணையாக இருக்கும். அடுத்த, 30 ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்களை மாணவர்கள் எதிர்கொள்ள உள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவிற்கு தலைமை தாங்கி, வி.ஐ.டி., வேந்தர் விஸ்வநாதன் பேசியதாவது:நாட்டில், 14 கோடி இளைஞர்களில், 4 கோடி இளைஞர்களுக்கு மட்டும் தான் உயர் கல்வி படிக்க வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், ஆசிரியர் பற்றாக்குறை, போதுமான ஆராய்ச்சியாளர்கள் இல்லாமை, நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது குறைவு போன்ற காரணிகள் உயர் கல்வி துறை சந்தித்து வரும் முக்கியமான சவால்களாக உள்ளன. ஆராய்ச்சிகளில் சிறப்பாக செயல்படும்

ஜப்பான், சீனா, தென் கொரியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, நாம் பின்தங்க, இதுவே காரணம்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் இளநிலை மற்றும் முதுநிலை படித்த, 7,282 மாணவ - மாணவியருக்கும், ஆராய்ச்சி படிப்பு படித்த 287 மாணவ - மாணவியருக்கும் என, மொத்தம், 7,569 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. இதில், 57 பேர் தங்கப்பதக்கம் பெற்றனர். விழாவில் வி.ஐ.டி., துணைத் தலைவர்கள் சங்கர் விஸ்வநாதன், சேகர் விஸ்வநாதன், ஜி.வி.செல்வம், துணைவேந்தர் ராம்பாபு கோடாளி, இணை துணை வேந்தர் டாக்டர் எஸ்.நாராயணன், பதிவாளர் டாக்டர் கே.சத்யநாராயணன், பேராசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X