பொது செய்தி

தமிழ்நாடு

நொய்யல் கழிவு நீர் திட்டம்: விவசாயிகள் முடிவு

Added : செப் 29, 2021
Share
Advertisement
கருமத்தம்பட்டி:'நொய்யல் ஆற்று கழிவு நீரை, வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லும் திட்டத்துக்கு எதிராக, சூலுார் வட்டார கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்துவது' என, விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.நொய்யல் ஆற்றில் வரும் கழிவு நீர், சூலுார் சுற்றுவட்டார குளங்களுக்கு திருப்பி விடப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக இம்முறை செயல்பாட்டில் உள்ளது.இதனால், சூலுார் பகுதி

கருமத்தம்பட்டி:'நொய்யல் ஆற்று கழிவு நீரை, வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லும் திட்டத்துக்கு எதிராக, சூலுார் வட்டார கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்துவது' என, விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.நொய்யல் ஆற்றில் வரும் கழிவு நீர், சூலுார் சுற்றுவட்டார குளங்களுக்கு திருப்பி விடப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக இம்முறை செயல்பாட்டில் உள்ளது.இதனால், சூலுார் பகுதி விவசாயிகள் பயனடைந்து வந்தனர். இந்நிலையில், ஒண்டிப்புதூர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில், சுத்திகரிக்கப்படும் கழிவு நீரை, குழாய் மூலம், சுல்தான்பேட்டை பகுதிக்கு கொண்டு செல்லும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு சூலுார் பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.நொய்யல் பாதுகாப்பு குழு விவசாயிகள் கூறுகையில், 'வரும் அக்., 2ம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடக்க உள்ளது. அதில், நொய்யல் ஆற்று கழிவு நீரை சுல்தான்பேட்டை பகுதிக்கு கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து, நொய்யல் ஆற்று நீரால் பயனடையும், அனைத்து ஊராட்சிகளிலும் நடக்கும் கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்துவோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X