பொது செய்தி

தமிழ்நாடு

பாலமலை பழங்குடியினர் தடுப்பூசி செலுத்த ஆர்வம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள பாலமலை பழங்குடியின மக்களில், 70 சதவீதத்தினர், முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், நாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலமலையில் பெரும்பதி, பெருக்குப்பதி, பெருக்குப்பதிபுதுார், குஞ்ஜூர்பதி, மாங்குழி, பசுமணி, பசுமணிபுதுார் உட்பட பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களில், 70

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள பாலமலை பழங்குடியின மக்களில், 70 சதவீதத்தினர், முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், நாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலமலையில் பெரும்பதி, பெருக்குப்பதி, பெருக்குப்பதிபுதுார், குஞ்ஜூர்பதி, மாங்குழி, பசுமணி, பசுமணிபுதுார் உட்பட பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களில், 70 சதவீதத்தினர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திகொண்டனர்.நாயக்கன்பாளையம் சுகாதார ஆய்வாளர் துளசியப்பன் கூறியதாவது:பழங்குடியின மக்களின் அச்சத்தை போக்கும் வகையில், தடுப்பூசிகளின் முக்கியத்துவம் குறித்தும், அதனால் ஏற்படும் பாதுகாப்பு குறித்தும், தெளிவாக செவிலியர்களை கொண்டு விளக்கினோம். பின், பழங்குடியினரில் ஒரு சிலர் மட்டுமே தடுப்பூசி போட முன்வந்தனர். அவர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாததால், தடுப்பூசி போட்டுக்கொள்ள மற்றவர்களும் முன்வந்தனர். இங்குள்ள பழங்குடியின கிராமங்களில் வசிக்கும் சுமார், 500 பேரில், 370க்கு மேற்பட்டோருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தகுதியுள்ள நபர்களுக்கு, இரண்டாம் தவணை தடுப்பு ஊசி போட ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X