பொது செய்தி

தமிழ்நாடு

1 கி.மீ., போக்குவரத்தை கண்காணிக்க இ.சி.ஆரில் 'ஜூம்' கேமரா அமைப்பு

Added : செப் 29, 2021
Share
Advertisement
மாமல்லபுரம் : சென்னை அக்கரை - மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை, நான்குவழிப் பாதையாக அமைந்துள்ளது. இத்தடம், 35 கி.மீ., தொலைவிற்கு அமைந்து, சுங்க கட்டண சாலையாக தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் நிர்வகிக்கிறது.மாமல்லபுரம், முட்டுக்காடு, கோவளம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள், திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவில் ஆகிய ஆன்மிக தலங்கள் மற்றும் கடற்கரை விடுதிகள் என சுற்றுலா
 1 கி.மீ., போக்குவரத்தை கண்காணிக்க இ.சி.ஆரில் 'ஜூம்' கேமரா அமைப்பு

மாமல்லபுரம் : சென்னை அக்கரை - மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை, நான்குவழிப் பாதையாக அமைந்துள்ளது.

இத்தடம், 35 கி.மீ., தொலைவிற்கு அமைந்து, சுங்க கட்டண சாலையாக தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் நிர்வகிக்கிறது.மாமல்லபுரம், முட்டுக்காடு, கோவளம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள், திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவில் ஆகிய ஆன்மிக தலங்கள் மற்றும் கடற்கரை விடுதிகள் என சுற்றுலா பகுதியாகவும் உள்ளது.இதனால் எந்நேரமும் போக்குவரத்து அதிகம் காணப்படும். அதேபோல் விபத்துகளும் அதிகம் நிகழ்கின்றன.இப்பாதையில் ஏற்படும் விபத்துகளை குறைப்பதற்காக, தமிழக சாலை பாதுகாப்பு திட்டத்தில், உலக வங்கி நிதி, 8 கோடி ரூபாய் மதிப்பில், கடந்த பிப்ரவரியில் பாதுகாப்பு நவீன தொழில்நுட்ப கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.இதில், 'ஆட்டோமேடிக் ஸ்பீடு என்போர்ஸ் சிஸ்டம்' எனும் தானியங்கி வேக செயலாக்க சாதனம், 'ஆட்டோமேடிக் வீடியோ இன்சிடென்ட் டிடெக் ஷன்' எனும் தானியங்கி காணொளி நிகழ்வு கண்டறியும் சாதனம் அமைக்கப்பட்டுள்ளன.மேலும், 'வேரியபிள் மெசெஜ் டிஸ்பிளே சிஸ்டம்' தகவல்கள் அறிவிப்பு திரையிடும் சாதனம், 'சேப்டி ரோலர் பேரியர்' எனும் பாதுகாப்பு உருளை தடுப்பு ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது இத்திட்டத்தில், 1 கி.மீ., பகுதி போக்குவரத்து நிகழ்வை, 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்கும், 'பேன் டில்ட் ஜூம்' எனப்படும் நவீன கேமராக்கள், மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ளன. இவற்றின் கட்டுப்பாட்டு மையம், உத்தண்டி சுங்கச்சாவடி பகுதியில் உள்ளது.ஜூம் கேமராவில் 1 கி.மீ., தொலைவில் நடக்கும் நிகழ்வை காண இயலும். 500 மீட்டர் அளவில் மட்டும் அதை பெரிதாக்கி பார்க்க இயலும். காட்சி பதிவுகள், மூன்று மாதங்கள் வரை பதிந்திருக்கும் வசதி உள்ளது.அந்த வகையில், 20 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.20 கேமராக்கள் எங்கெங்கு?தானியங்கி காணொலி நிகழ்வு கண்டறியும் சாதனம் - மாமல்லபுரம் புறவழிச் சந்திப்பில் இரண்டு கேமராக்கள்; கிருஷ்ணன்காரணையில் இரண்டு கேமராக்கள்; வட நெம்மேலி, உத்தண்டியில் தலா ஒரு கேமரா பொருத்தப்பட்டு உள்ளன.நவீன 'ஜூம்' கேமராக்கள் - மாமல்லபுரம் புறவழி சந்திப்பு, அரசு மருத்துவமனை, பூஞ்சேரி சந்திப்புகளில் தலா, இரண்டு கேமராக்கள்; பேரூரில் ஒரு கேமரா; கோவளம் சந்திப்பு மற்றும் பனையூரில் தலா இரண்டு கேமராக்கள் உட்பட, மொத்தம் 20 கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X