பெ.நா.பாளையம்:குருடம்பாளையம் சி.ஆர்.பி.எப்., வளாகத்தில், பேரிடர் மேலாண்மை குறித்த ஒத்திகை பயிற்சி நடந்தது.நரசிம்மநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் சாலை, குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கதிர்நாயக்கன்பாளையம் அருகே, சி.ஆர்.பி.எப்., வளாகம் உள்ளது.இங்குள்ள மத்திய பயிற்சிக் கல்லுாரியில், நாடு முழுவதும் சி.ஆர்.பி.எப்., பணிக்காக தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. கல்லுாரி வளாகத்தில், பேரிடர் மேலாண்மை குறித்த ஒத்திகை பயிற்சி நடந்தது.கல்லுாரி முதல்வர் சதீஷ்சந்திரவர்மா தலைமை வகித்தார். கமாண்டன்ட் ராஜேஷ் குமார் முன்னிலை வகித்தார். தெற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பங்கேற்று, கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கும் நபர்களை, கான்கிரீட் கற்களை உடைத்து காப்பாற்றுவது மற்றும் தீயை பாதுகாப்பான முறையில் அணைப்பது, தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தும் முறை, முதலுதவி உட்பட பல்வேறு விழிப்புணர்வு பயிற்சிகளை செய்து காட்டினார். சி.ஆர்.பி.எப்., அலுவலர்கள், பணியாளர்கள், பயிற்றுனர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE