பொது செய்தி

தமிழ்நாடு

பயிறு வகை சாகுபடியில் அதிக மகசூல் பெற வழி

Added : செப் 29, 2021
Share
Advertisement
சூலுார்:''பயறு வகை பயிர் சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் வாயிலாக, அதிக மகசூல் பெறலாம்,'' என, வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.பயறு வகை பயிர்களான பாசிப்பயறு, உளுந்து, தட்டை, துவரை உள்ளிட்டவைகளில் மற்றவைகளை காட்டிலும், மூன்று மடங்கு அதிக புரதச்சத்து உள்ளது. அவைகளை பயிரிடுவதால், காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து, வேர் முடிச்சுகளில் சேமித்து

சூலுார்:''பயறு வகை பயிர் சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் வாயிலாக, அதிக மகசூல் பெறலாம்,'' என, வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.பயறு வகை பயிர்களான பாசிப்பயறு, உளுந்து, தட்டை, துவரை உள்ளிட்டவைகளில் மற்றவைகளை காட்டிலும், மூன்று மடங்கு அதிக புரதச்சத்து உள்ளது. அவைகளை பயிரிடுவதால், காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து, வேர் முடிச்சுகளில் சேமித்து மண்ணின் வளத்தை அதிகரிக்கிறது. தனிப்பயிராகவும், ஊடு பயிராகவும், வரப்பு பயிராகவும் பயிரிடப்படுகின்றன. கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுகிறது.இதுகுறித்து, சூலுார் வட்டார வேளாண் உதவி இயக்குனர் விஜயகல்பனா அறிக்கை:கோவை மாவட்டத்தில், பயிறு வகை பயிர்களின் சாகுபடி பரப்பை, திருந்திய பயிறு வகை தொழில்நுட்ப முறையில் அதிகரிக்க, 50 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்த காலத்தில் அதிக மகசூல் தரும் ரகங்களையும், பூச்சி மற்றும் நோயை தாங்கி வளரக்கூடிய உளுந்து (வம்பன் - 7,8,10,11) பாசிப்பயிறு (கோ 8, விரட் 205-7, வம்பன் 4) தட்டை (கோ -7, வம்பன் 3) துவரை (கோ 8, கோ 9) ஆகியவற்றை தேர்வு செய்ய வேண்டும்.விதை நேர்த்தி செய்ய, ஒரு எக்டருக்கு தேவையான விதைகளை, ரைசோபியம் 600 கிராம், பாஸ்போபாக்டீரியா- 600 கிராமுடன் அரிசி கஞ்சி கலந்த பின் விதைக்க வேண்டும். ஒரு சதுரடிக்கு, 33 செடிகள் வைத்து பராமரிக்க வேண்டும். பயிறு பூக்கும் தருணத்திலும், 15 நாட்கள் கழித்தும், 2 சதவீத டி.ஏ.பி., கரைசலை நீரில் கலந்து பயிரில் சீராக தெளிக்க வேண்டும். பல்சஸ் ஒண்டர் 2 கிலோவை, 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். தெளிப்பு நீர் பாசனம், சொட்டுநீர் பாசனம் செய்ய வேண்டும்.ஒருங்கிணைந்த முறையில் வெள்ளை ஈக்கள், அசுவினி இலைப்பேன் போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த, இமிடகுள்ளோரிபிட் 100 மி., பச்சை காய் துளைப்பான், புள்ளி காய் துளைப்பான் மற்றும் புழுக்களை கட்டுப்படுத்த, குளோரன்ட்ரானிலிப்ரோல் 18.5 எஸ்.சி., 150 மி மருந்தை ஒட்டுப் பசையுடன் கலந்து, பயிர்கள் மீது சீராக தெளிக்க வேண்டும். இம்முறைகள் வாயிலாக அதிக மகசூல் பெற முடியும்.இவ்வாறு, அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X