சென்னை : உலக வெறிநாய்க்கடி தடுப்பு தினத்தையொட்டி, வேப்பேரி கால்நடை மருத்துவமனையில், செல்லப்பிராணிகளுக்கு, இன்று இலவசமாக 'ரேபிஸ்' தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
இது குறித்து, கால்நடை மருத்துவ கல்லுாரி நிர்வாகிகள் கூறியதாவது:ரேபிஸ் தொற்றில் இருந்து செல்ல பிராணிகளையும், மனிதர்களையும் பாதுகாப்பதற்கு தடுப்பூசி மட்டுமே ஒரே ஒழி. நாய்களை பொறுத்தவரை, பிறந்த முதலாண்டில், இருமுறை ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். அதைத்தொடர்ந்து, ஆண்டுதோறும் ஒருமுறை தடுப்பூசியை செலுத்த வேண்டியது அவசியம்.வேப்பேரி கால்நடை மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
உலக வெறிநாய்க்கடி தடுப்பு தினத்தையொட்டி, அந்த தடுப்பூசி இலவசமாக இன்று செலுத்தப்பட உள்ளது.காலை 9:00 மணி முதல், தங்களது செல்ல பிராணிகளை மருத்துவமனைக்கு அழைத்து வந்து, பொதுமக்கள் இலவசமாக ரேபிஸ் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளலாம்.அதனுடன், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி சிறப்பு விருந்தினராக பங்குபெறும் 'ஆன்லைன்' கருத்தரங்கமும் நடைபெற உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE