தென்னை மரம் முறிந்து விழுந்து தொழிலாளி பலியான சோகம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தென்னை மரம் முறிந்து விழுந்து தொழிலாளி பலியான சோகம்

Added : செப் 29, 2021
Share
சூலுார்:சுல்தான்பேட்டை அருகே தென்னை மரம் முறிந்து விழுந்து, 100 நாள் வேலை உறுதி திட்ட தொழிலாளி பலியானார்.சுல்தான்பேட்டை அடுத்த தாளக்கரை ஊராட்சி டி.வடுகபாளையத்தை சேர்ந்தவர் கோபால், 70. இவர், 100 நாள் வேலை உறுதி திட்ட தொழிலாளி. நேற்று முன்தினம், தாளக்கரை -- செஞ்சேரிமலை சாலையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக, அருகில் இருந்த தென்னை மரம் முறிந்து, ஒரு பகுதி

சூலுார்:சுல்தான்பேட்டை அருகே தென்னை மரம் முறிந்து விழுந்து, 100 நாள் வேலை உறுதி திட்ட தொழிலாளி பலியானார்.சுல்தான்பேட்டை அடுத்த தாளக்கரை ஊராட்சி டி.வடுகபாளையத்தை சேர்ந்தவர் கோபால், 70. இவர், 100 நாள் வேலை உறுதி திட்ட தொழிலாளி. நேற்று முன்தினம், தாளக்கரை -- செஞ்சேரிமலை சாலையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக, அருகில் இருந்த தென்னை மரம் முறிந்து, ஒரு பகுதி கோபாலின் தலைமீது விழுந்தது. படுகாயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். முதலுதவிக்கு பின், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பலியானார். சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X