பொது செய்தி

தமிழ்நாடு

மேல்மருவத்தூரில் ஏரி ஆக்கிரமிப்பு அறிக்கை அளிக்க கலெக்டருக்கு உத்தரவு.

Added : செப் 29, 2021
Share
Advertisement
சென்னை : மேல்மருவத்துாரில், ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், மாவட்ட கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், சோத்துப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் தாக்கல் செய்த மனு:மேல்மருவத்துார் பேருந்து நிலையம் அருகில், கீழ்மருவத்துார் ஏரி உள்ளது. வருவாய் ஆவணங்களிலும் ஏரி பற்றிய குறிப்பு உள்ளது; ஏரி

சென்னை : மேல்மருவத்துாரில், ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், மாவட்ட கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், சோத்துப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் தாக்கல் செய்த மனு:மேல்மருவத்துார் பேருந்து நிலையம் அருகில், கீழ்மருவத்துார் ஏரி உள்ளது. வருவாய் ஆவணங்களிலும் ஏரி பற்றிய குறிப்பு உள்ளது; ஏரி அருகில் குட்டை இருந்தது. 2015ல் ஏரியில், திருமண மண்டபம், பஸ் நிலையம், வாகன நிறுத்தம், விடுதி என, ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை.எனவே, மனுவை பரிசீலித்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற, அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.கடந்த 2018ல், இவ்வழக்கு தொடரப்பட்டது. அரசு தரப்பில், அப்போது பதில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அனிதா, அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரினார்.இதையடுத்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், 'இவ்வழக்கு, 2020 மார்ச் மாதம், கடைசியாக விசாரணைக்கு வந்துள்ளது. எனவே, தற்போதைய நிலை குறித்த அறிக்கையை, ஐந்து வாரங்களில் கலெக்டர் தாக்கல் செய்ய வேண்டும்' எனக் கூறியுள்ளது.விசாரணையை, நவ., 26க்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X