போதையில் இயக்கம் பாதை மாறிடும் கவனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'போதை'யில் இயக்கம் 'பாதை' மாறிடும் கவனம்

Added : செப் 29, 2021 | கருத்துகள் (1)
Share
அன்னுார்:அன்னுார் போலீஸ் ஸ்டேஷனில், ஆட்டோ டிரைவர்களுக்கான கூட்டம் நடந்தது.இன்ஸ்பெக்டர் நித்யா பேசுகையில், ''ஆட்டோ டிரைவர்கள் மிதமான வேகத்தில் வாகனத்தை இயக்க வேண்டும். போதையிலோ, புகை பிடித்துக் கொண்டோ, மொபைல் போனில் பேசிக் கொண்டே ஆட்டோ இயக்கக் கூடாது. கண்டிப்பாக சீருடை அணிய வேண்டும். அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். ஆட்டோக்களை போக்குவரத்துக்கு இடையூறாக

அன்னுார்:அன்னுார் போலீஸ் ஸ்டேஷனில், ஆட்டோ டிரைவர்களுக்கான கூட்டம் நடந்தது.இன்ஸ்பெக்டர் நித்யா பேசுகையில், ''ஆட்டோ டிரைவர்கள் மிதமான வேகத்தில் வாகனத்தை இயக்க வேண்டும். போதையிலோ, புகை பிடித்துக் கொண்டோ, மொபைல் போனில் பேசிக் கொண்டே ஆட்டோ இயக்கக் கூடாது. கண்டிப்பாக சீருடை அணிய வேண்டும். அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். ஆட்டோக்களை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தக் கூடாது. சந்தேக நபர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து, அதன் வாயிலாக, திருட்டு உட்பட குற்ற சம்பவங்களை துப்பு துலக்க உதவ வேண்டும்,'' என்றார்.பல்வேறு தொழிற்சங்கங்களின் ஆட்டோ டிரைவர்கள், போலீஸ் எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X