பொது செய்தி

தமிழ்நாடு

கப்பலில் அழகி போட்டி; ராணுவத்தினருக்கு உதவ பிரதமர் நிவாரண நிதிக்கு அளிப்பு

Updated : செப் 29, 2021 | Added : செப் 29, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை : கோவாவில், கப்பலில் நடந்த அழகிப் போட்டியில் கிடைத்த நிதி, ராணுவத்தினர் குடும்பத்திற்கு உதவ, பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.சமூகத்தில் சிறப்பாக பணியாற்றுவோரை ஊக்குவிக்கவும், சமூக காரணங்களுக்காக நிதி திரட்டவும், கோவாவில் இந்தியன் மீடியா ஒர்க்ஸ் சார்பில், மிஸ்டர், மிஸ்ஸஸ் மற்றும் மிஸ் அழகிப்போட்டி கப்பலில் நடந்தது. ஆண்கள், பெண்கள் மற்றும்
Fashion World 2021, Fashion, Film Industry, Big Daddy Casino

சென்னை : கோவாவில், கப்பலில் நடந்த அழகிப் போட்டியில் கிடைத்த நிதி, ராணுவத்தினர் குடும்பத்திற்கு உதவ, பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

சமூகத்தில் சிறப்பாக பணியாற்றுவோரை ஊக்குவிக்கவும், சமூக காரணங்களுக்காக நிதி திரட்டவும், கோவாவில் இந்தியன் மீடியா ஒர்க்ஸ் சார்பில், மிஸ்டர், மிஸ்ஸஸ் மற்றும் மிஸ் அழகிப்போட்டி கப்பலில் நடந்தது. ஆண்கள், பெண்கள் மற்றும் திருமணமான பெண்கள் என மூன்று பிரிவுகளில் நடந்த இப்போட்டியில், நடிகை ஷெரின் காஞ்ச்வாலா, பாலிவுட் நடிகர் ஷபிர் அலி, நடிகர் பாலாஜி முருகதாஸ், சினேகா நாயர் உள்ளிட்ட பலர் நடுவர்களாகவும், சிறப்பு அழைப்பாளர்களாகவும் பங்கேற்று வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.


latest tamil news



'மிஸ்டர் அழகன்' பட்டத்தை தமிழகத்தை சேர்ந்த பாஸ்கர் தனசேகரும்; 'மிஸ் அழகி' பட்டத்தை குஜராத்தை சேர்ந்த ராதிகா தேவும்; 'மிஸ்ஸஸ் அழகி' பட்டத்தை, தமிழகத்தை சேர்ந்த ப்ரியா கிஷோரும் வென்றனர். வெற்றி பெற்ற மூவரும், துபாய், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட சர்வதேச மாடலிங் தளங்களில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

இந்த அழகிப்போட்டி வாயிலாக கிடைத்த தொகையை, கொரோனா காலத்தில் நாட்டுக்காக உழைத்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு உதவும் வகையில், பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு, இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் அளித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - madurai,இந்தியா
29-செப்-202112:19:51 IST Report Abuse
தமிழன் PM Care பத்தி பேசி வழக்கம் போல் விம்மி விம்மி அழும் மோடி பீதிக்கள் வழக்கம் போல் வந்து ஒப்பாரி வைத்து விட்டு செல்லவும்.
Rate this:
Cancel
selva - Chennai,இந்தியா
29-செப்-202111:02:08 IST Report Abuse
selva ""ராணுவத்தினருக்கு உதவ பிரதமர் நிவாரண நிதிக்கு அளிப்பு "" சபாஷ் ..
Rate this:
Cancel
விழியப்பன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
29-செப்-202110:57:26 IST Report Abuse
விழியப்பன் அது, அரசாங்க நிதி இல்லையாமே? பின் எப்படி இராணுவத்திற்கு உதவுவார்கள்? நேரடியாய், இராணுவத்திற்கே கொடுக்க தடையேதும் உள்ளதா? இருப்பின் "இராணுவ நிவாரண நிதி" என ஒன்றை உருவாக்கலாமே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X