சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேட்டையாடிய இருவர் கைது

Added : செப் 29, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:காரமடை அருகே, நாட்டு வெடிகுண்டை வெடிக்க செய்து, காட்டுப்பன்றியை வேட்டையாடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.காரமடை, செல்லப்பனுார் அருகேயுள்ள பள்ளத்தில், வனவர் பிரபு, வனக்காப்பாளர் குப்புசாமி, வனக்காவலர் சிவராமன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர் குழுவினர் ஆய்வு செய்தனர். பள்ளத்தில் காட்டுப்பன்றி ஒன்று இறந்து கிடந்தது.விசாரணையில், செல்லப்பனுாரை சேர்ந்த

மேட்டுப்பாளையம்:காரமடை அருகே, நாட்டு வெடிகுண்டை வெடிக்க செய்து, காட்டுப்பன்றியை வேட்டையாடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.காரமடை, செல்லப்பனுார் அருகேயுள்ள பள்ளத்தில், வனவர் பிரபு, வனக்காப்பாளர் குப்புசாமி, வனக்காவலர் சிவராமன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர் குழுவினர் ஆய்வு செய்தனர். பள்ளத்தில் காட்டுப்பன்றி ஒன்று இறந்து கிடந்தது.விசாரணையில், செல்லப்பனுாரை சேர்ந்த செந்தில்குமார், 38, மனோகரன், 36, செல்வராஜ், 33, கெண்டேபாளையத்தை சேர்ந்த செந்தில்குமார், 44 ஆகியோர், நாட்டு வெடிகுண்டை பயன்படுத்தி வேட்டையாடியது தெரியவந்தது.மனோகரன், செந்தில்குமார் ஆகியோரை, காரமடை வனச்சரக அலுவலர் மனோகரன் கைது செய்து விசாரிக்கின்றனர். இருவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X