பொது செய்தி

தமிழ்நாடு

'பீர்' பாட்டிலால் மண்டை உடைப்பு

Added : செப் 29, 2021
Share
Advertisement
திருமங்கலம் : திருமங்கலத்தில், பீர் பாட்டிலால் ரவுடியின் மண்டையை உடைத்த நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.திருமங்கலம், திருவல்லீஸ்வரர் நகரைச் சேர்ந்தவர் தினேஷ், 28; ஆட்டோ ஓட்டுனர். திருமங்கலம் காவல் நிலையத்தில், சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர், நேற்று முன்தினம் இரவு என்.வி.ஆர்., பகுதியில் நின்றார். அப்போது அங்கு வந்த, நான்கு பேர் கும்பல், முன்விரோதம் காரணமாக

திருமங்கலம் : திருமங்கலத்தில், பீர் பாட்டிலால் ரவுடியின் மண்டையை உடைத்த நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.

திருமங்கலம், திருவல்லீஸ்வரர் நகரைச் சேர்ந்தவர் தினேஷ், 28; ஆட்டோ ஓட்டுனர். திருமங்கலம் காவல் நிலையத்தில், சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர், நேற்று முன்தினம் இரவு என்.வி.ஆர்., பகுதியில் நின்றார். அப்போது அங்கு வந்த, நான்கு பேர் கும்பல், முன்விரோதம் காரணமாக தினேஷிடம் தகராறு செய்து, பீர் பாட்டிலால் அவரது மண்டையில் அடித்துள்ளனர்.இதில் காயமடைந்த தினேஷ், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விசாரித்த திருமங்கலம் போலீசார் திருவள்ளூரைச் சேர்ந்த, சுரேஷ், 38, முகப்பேரைச் சேர்ந்த மூர்த்தி, 32, உட்பட நான்கு பேரை நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X