பொது செய்தி

தமிழ்நாடு

கொடுங்கையூர் குப்பை கிடங்கில் மரக்கன்றுகள் நடும்பணி

Added : செப் 29, 2021
Share
Advertisement
கொடுங்கையூர் : சுற்றுச்சூழலை பாதுகாக்க, கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது.வடசென்னையில் உள்ள கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு, 350 ஏக்கர் பரப்பு கொண்டது. 1986 முதல் இங்கு குப்பை கொட்டப்பட்டு வருகிறது.தற்போது, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட முதல் எட்டு மண்டலங்களில் இருந்து, தினமும் சேகரிக்கப்படும் 2,500 டன் குப்பை, கொடுங்கையூர் குப்பைக்

கொடுங்கையூர் : சுற்றுச்சூழலை பாதுகாக்க, கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது.

வடசென்னையில் உள்ள கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு, 350 ஏக்கர் பரப்பு கொண்டது. 1986 முதல் இங்கு குப்பை கொட்டப்பட்டு வருகிறது.தற்போது, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட முதல் எட்டு மண்டலங்களில் இருந்து, தினமும் சேகரிக்கப்படும் 2,500 டன் குப்பை, கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகிறது.மலை போல் குவிந்துள்ள குப்பையால், அப்பகுதிகளில் காற்று மாசு மற்றும் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது.மேலும், அப்பகுதியில் வசிப்போருக்கு சுவாச பிரச்னையுடன், புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.இதைத் தவிர்க்க, பல்வேறு திட்டங்களை மாநகராட்சி அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது.இதுகுறித்து, தண்டை யார்பேட்டை செயற்பொறியாளர் காமராஜ் கூறியதாவது:சுற்றுச்சூழலை பாதுகாக்க கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் 5,000 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.வேம்பு, புங்கன், வாகை, ஆலம், அரசு உள்ளிட்ட நாட்டு மரங்களும், எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.வாரத்திற்கு 200 மரக்கன்றுகள் வீதம், கொடுங்கையூர் குப்பைக் கிடங்கின் உள்ளே சுற்றுச்சுவர், சென்டர் மீடியன், கால்வாய்கள் ஓரம் மற்றும் காலியிடங்களில் நடப்பட்டு வருகிறது. ஓரிரு மாதங்களில் இப்பணி முடிவடையும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X